» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடியில் பிரபல நடிகையின் தந்தைக்கு அரிவாள் வெட்டு: 2 வாலிபர்கள் கைது!
செவ்வாய் 2, ஜூன் 2026 8:47:49 AM (IST)
தூத்துக்குடி முத்தையாபுரத்தில் நடிகை தீபாவின் தந்தையை அரிவாளால் வெட்டிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பியோடிய 3 பேரை தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரம் மகாலட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்தவர் புலவர் கணேசன் (70). இவரது மகள் தீபா, சின்னத்திரை நடிகை ஆவார். இவர் சில சீரியல்கள் மற்றும் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இந்த நிலையில், புலவர் கணேசன் நேற்று முன்தினம் மாலையில் முத்தையாபுரம் பஜாரில் உள்ள டீக்கடை அருகே நின்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள், தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து புலவர் கணேசனை சரமாரியாக வெட்டினர். இதில் அவர் பலத்த காயமடைந்தார். இதைப் பார்த்ததும் அருகில் இருந்த ஒருவர் தடுக்க முயன்றார். ஆனால் மர்ம நபர்கள் அவரையும் வெட்டியதில், அவரது கையிலும் வெட்டுக் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.
காயமடைந்த இரண்டு பேரும் மீட்கப்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து முத்தையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் தொடர்புடைய தூத்துக்குடி சக்திநகர் 1-வது தெருவைச் சேர்ந்த உச்சிமாகாளி மகன் பொன்ராஜ் (25) மற்றும் இசக்கி (22) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
மேலும், தலைமறைவாக உள்ள மற்ற 3 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் முத்தையாபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கார் - டிப்பர் லாரி நேருக்கு நேர் மோதி விபத்து – ஒருவர் பரிதாப பலி; நண்பர் படுகாயம்!
செவ்வாய் 2, ஜூன் 2026 9:56:36 PM (IST)

கல்வி கட்டண விவரத்தைப் பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும்: அரசு அதிரடி உத்தரவு!
செவ்வாய் 2, ஜூன் 2026 5:39:38 PM (IST)

தமிழகத்தில் குட்கா, பான் மசாலா பொருட்களுக்கான தடை மேலும் ஓராண்டு நீட்டிப்பு: அரசாணை வெளியீடு!
செவ்வாய் 2, ஜூன் 2026 4:52:20 PM (IST)

சர்வதேசத் திரைப்பட விழாவிற்கு பொருநை ஆவணப்படம் தேர்வு!
செவ்வாய் 2, ஜூன் 2026 4:38:17 PM (IST)

தவெக நிர்வாகிகள் பாலியல் வன்கொடுமை: நயினார் நாகேந்திரன், அண்ணாமலை கண்டனம்!
செவ்வாய் 2, ஜூன் 2026 4:19:42 PM (IST)

தவெகவின் போலி வேடத்தை மக்களே கலைத்து விடுவார்கள்: டிடிவி தினகரன் கடும் விமர்சனம்
செவ்வாய் 2, ஜூன் 2026 4:10:55 PM (IST)


