» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
திருமாவளவனை விமர்சித்த ஆ.ராசா பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் - ஆதவ் அர்ஜுனா வலியுறுத்தல்
வெள்ளி 22, மே 2026 5:34:48 PM (IST)

திருமாவளவனை விமர்சித்து நாகரிகமற்ற முறையில் சமூக வலைதளத்தில் பதிவிட்ட ஆ.ராசா, ஒட்டுமொத்தத் தமிழக மக்களிடமும் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தமிழகப் பொதுப்பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வலியுறுத்தியுள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பொதுப்பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்ததாவது: "நடந்து முடிந்த தேர்தலில் தமிழக மக்கள் சாதி, மத, பண பல அரசியலை முற்றிலும் தூக்கியெறிந்து விட்டு, முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான தவெக-விற்கு 108 இடங்களில் உன்னத வெற்றி தந்துள்ளனர். பெரியார், அண்ணா, அம்பேத்கர் கனவு கண்ட உண்மையான மதசார்பற்ற சமூகநீதி அமைச்சரவையை முதலமைச்சர் விஜய் உத்தியோகப்பூர்வமாக உருவாக்கியுள்ளார்.
'ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு' என்ற தாரமீகக் கொள்கைப்படி கூட்டணிக் கட்சிகளுக்கு அதிகாரத்தை உத்தியோகப்பூர்வமாகப் பகிர்ந்து கொடுத்துள்ளார். இதன் மூலம் 59 ஆண்டுகள் கழித்துக் காங்கிரஸும், 1948-இல் தொடங்கப்பட்ட ஐயூஎம்எல் மற்றும் விசிக ஆகிய கட்சிகளும் ஆட்சியில் நேரடி அங்கீகாரத்தைப் பெற்றுள்ளன. இந்த அமைச்சரவையில் 8 தலித் சகோதரர்களுக்கு முக்கியத் துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதனை இந்தியாவே வியப்புடன் பார்க்கிறது."
கூட்டணி என்பது தேர்தலுக்கானது மட்டுமே என்றும், தேர்தலுக்குப் பின் தங்களது அரசியல் முடிவை எடுக்கக் கூட்டணிக் கட்சிகளுக்கு முழு உரிமை உண்டு என்றும் குறிப்பிட்ட அவர், தொடர்ந்து ஆ.ராசாவின் பதிவு குறித்துப் பேசியதாவது: "எந்தவொரு கட்சியும் திமுக-விற்கு அடிமை சாசனம் எழுதிக் கொடுக்கவில்லை. அப்படியிருக்கையில், முன்னாள் ஒன்றிய அமைச்சர் ஆ.ராசா, விசிக-வையும் அதன் தலைவர் திருமாவளவனையும் பெண்ணின் உறவுடன் தொடர்புபடுத்திச் சொல்லக்கூடாத கொடூர வார்த்தைகளால் விமர்சித்துள்ளார். திமுக துணைப் பொதுச் செயலாளரின் இந்த நாகரிகமற்ற பதிவுக்குத் திமுக தலைவரின் கருத்து என்ன? திமுக-விடம் தற்போது கடமை, கண்ணியம், கட்டுப்பாடு ஆகிய மூன்று கோட்பாடுகளும் முற்றிலும் இல்லை.
ஆ.ராசாவின் இந்தச் செயலுக்கு அவர் விசிக தலைவரிடமும், தமிழக மக்களிடமும் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். பெண்களின் உரிமைக்காக எப்போதும் குரல் கொடுக்கும் திமுக எம்பி கனிமொழியும், பெண்ணின் உறவை மையமாக வைத்துப் பேசிய ஆ.ராசாவின் இந்த அவதூறுக் கருத்தை வன்மையாகக் கண்டிக்க வேண்டும்."
தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் நிர்வாக மாற்றங்கள்:
பதவியேற்பு விழாவில் வந்தே மாதரம் பாடல் முதலில் பாடப்பட்டது குறித்து விளக்கிய அமைச்சர், முந்தைய ஸ்டாலின் தலைமையிலான உள்துறை அமைச்சகத்தின் சுற்றறிக்கை அறிவுறுத்தலின் படியே ஆளுநர் மாளிகையில் அது பாடப்பட்டதாகவும், தமிழக அரசின் உத்தியோகப்பூர்வ நிகழ்ச்சிகளில் எப்போதும் தமிழ்த்தாய் வாழ்த்திற்கே முதலிடம் வழங்கப்படும் என்றும், இதில் இருமொழிக் கொள்கை மற்றும் மாநில சுயாட்சியில் தவெக அரசு உறுதியாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.
மேலும், புதிய தவெக உள்கட்டமைப்பு அரசில் முந்தைய முந்தைய ஆட்சியின் 36 சதவீத கமிஷன் மற்றும் ஊழல் முறைகள் முற்றிலும் ஒழிக்கப்பட்டு 'ஜீரோ கமிஷன்' நேர்மையான நிர்வாகம் அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும், பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறைகளில் முந்தைய அரசால் போடப்பட்ட போலி டெண்டர்கள் அனைத்தும் உடனடியாக நிறுத்தி வைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும், அடுத்த 60 நாட்களில் முழுமையான நேர்மையான நிர்வாக மாற்றத்தை மக்கள் கண்முன்னே காண்பார்கள் என்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தேசிய டிஜிட்டல் கால்நடை இயக்கம்: கால்நடைகளின் விபரங்களைப் புதுப்பிக்க ஆட்சியர் அறிவுறுத்தல்!
வெள்ளி 22, மே 2026 5:47:46 PM (IST)

எல்லையை மீறிப்பேச வேண்டாம்! – திமுகவினருக்கு ஸ்டாலின் அறிவுரை! புதிய அமைச்சர்களுக்கு வாழ்த்து
வெள்ளி 22, மே 2026 3:33:47 PM (IST)

தவெக அமைச்சரவையில் விசிக பங்கேற்பு: திமுக எம்பி ஆ.ராசாவின் ட்வீட்களால் வெடித்தது சர்ச்சை!
வெள்ளி 22, மே 2026 12:53:47 PM (IST)

துணி காய வைக்கச் சென்ற இளம்பெண் மின்சாரம் பாய்ந்து பலி: தூத்துக்குடியில் சோகம்!
வெள்ளி 22, மே 2026 12:30:26 PM (IST)

அரசு விவகாரங்களில் தவெகவினர் தலையிடக் கூடாது! – அமைச்சர் என். ஆனந்த் அதிரடி உத்தரவு!
வெள்ளி 22, மே 2026 11:37:11 AM (IST)

தமிழக அமைச்சரவையில் விசிக, ஐயூஎம்எல் நேரடிப் பங்கேற்பு: வன்னியரசு, ஷாஜஹான் பதவியேற்பு!
வெள்ளி 22, மே 2026 11:24:12 AM (IST)


