» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கொக்கிரகுளத்தில் புதிய ஆதார் சேவை மையம் : ஆட்சியர் இரா.சுகுமார் திறந்து வைத்தார்

வியாழன் 21, மே 2026 4:38:35 PM (IST)



திருநெல்வேலி மாவட்டம், கொக்கிரகுளம் ரோஸ்மஹால் அருகில் UIDAI புதிய ஆதார் சேவை மையத்தை மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் இன்று திறந்து வைத்தார்.

இந்த ஆதார் சேவை மையத்தில் ஆதார் பதிவு, மக்கள் தொகை விவரங்கள் மற்றும் உயிர்வள தகவல் புதுப்பித்தல், பிழைதிருத்தம், குறைதீர் சேவைகள் உள்ளிட்ட அனைத்து ஆதார் சேவைகளும் ஒரே இடத்தில் வழங்கப்படுகின்றன. ஆதார் சேவை மையங்கள் நேரடியாக UIDAI மூலம் நிர்வகிக்கப்படுகின்றன. மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட அனைவரும் எளிதில் பயன்படுத்தக்கூடிய வகையில் சக்கர நாற்காலி அணுகுமுறை, கழிப்பறை வசதிகள் மற்றும் தனிப்பட்ட குறைதீர் அமைப்பு போன்ற வசதிகளுடன் இம்மையம் வடிவமைக்கப்பட்டுள்ளன. 

இந்த மையம் அனைத்து நாட்களிலும் செயல்படும். சென்னை, மதுரை, கிருஷ்ணகிரி, வேலூர், விழுப்புரம் அடுத்ததாக ஆறாவது ஆதார் சேவை மையம் தற்போது திருநெல்வேலியில் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த மையத்தில் ஒரு மேலாளர் நியமிக்கப்பட்டு, பொதுமக்களின் குறைகளைபெற்று, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அனுப்பி, விரைவான தீர்வை உறுதி செய்கிறார். ஆதார் சேவை மையங்கள் ஆதார் சேவைகளைப் பெறுவதற்கு, பொதுமக்கள் UIDAI –இன் "ஆதார் முன்பதிவு இணையதளம் (Aadhaar Appointment Portal) வாயிலாக இணையவழியிலும் முன்பதிவு செய்துகொள்ளலாம் : https://bookappointment.uidai.gov.in/

இம்மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் திறந்து வைத்து, அங்குள்ள வசதிகளை ஆய்வு செய்தார். மேலும், ஆன்லைன் முன்பதிவு முறை மற்றும் ஆதார் சேவைகள் வழங்கப்படும் நடைமுறைகள் குறித்து கேட்டறிந்தார். இந்நிகழ்வில், UIDAI மண்டல அலுவலக துணை இயக்குநர் (பெங்களூர்) பிரியா ஸ்ரீகுமார், துணை மேலாளர் சைதன்யா மோபுரு, மேலாளர்கள் எம்.எஸ். குணசேகரன், ம.கலையரசன் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory