» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
அதிமுகவில் கொறடா போர்: பேரவைத் தலைவரிடம் இபிஎஸ் - சி.வி.எஸ் தரப்பு மனு!
வியாழன் 14, மே 2026 4:20:43 PM (IST)
அதிமுகவில் உட்கட்சி மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், கட்சியின் தலைமை அலுவலகத்தின் பாதுகாப்பு மற்றும் சட்டப்படியான உரிமை குறித்து முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் இன்று செய்தியாளர்களிடம் உணர்ச்சிப்பூர்வமாகப் பேசினார்.
அதிமுக அலுவலகம் தங்களுக்குக் கோயில் போன்றது என்று குறிப்பிட்ட அவர் கூறியதாவது: இந்த உடலில் ஓடுவது அதிமுக-வின் ரத்தம். எங்களுக்குப் பல்வேறு பதவிகளைக் கொடுத்து அழகு பார்த்த இயக்கம் இது. அதிமுக அலுவலகத்தின் மீது ஒரு தூசிகூட படவோ, பாதிப்பு ஏற்படவோ எக்காலத்திலும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம். எங்களால் அந்த அலுவலகத்திற்கு எந்தப் பாதிப்பும் வராது, யாரும் அச்சப்பட வேண்டாம்."
மேலும், "சட்டப்படி நான் தான் உண்மையான அதிமுக தொண்டன் என்பதை நிரூபித்த பின்னரே, எனது கால் அந்த அலுவலகத்திற்குள் பதியும்," என்றும் அவர் உறுதியுடன் தெரிவித்தார்.
கொறடா விவகாரம்:
அதிமுக தற்போது இரண்டு அணிகளாகப் பிரிந்துள்ள நிலையில், சட்டமன்றத்தில் தங்களது தரப்பு கொறடாவை அங்கீகரிக்கக் கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பும், சி.வி. சண்முகம் - எஸ்.பி. வேலுமணி தரப்பும் தனித்தனியாகச் சட்டப்பேரவைத் தலைவரைச் சந்தித்து மனு அளித்துள்ளனர். இதனால் சட்டப்பேரவையில் யாருடைய உத்தரவு செல்லும் என்பதில் பெரும் குழப்பமும், பரபரப்பும் நிலவி வருகிறது.
இருதரப்பினரும் சட்ட ரீதியான போராட்டங்களை முன்னெடுத்துள்ள நிலையில், சி.வி. சண்முகத்தின் இந்த அறிக்கை தொண்டர்களிடையே முக்கியத்துவம் பெற்றுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மகளிர் உரிமைத் தொகை மறுசீரமைப்புக்குக் கால அவகாசம் தேவை: முதல்வர் விஜய் அறிவிப்பு!
வியாழன் 14, மே 2026 4:36:44 PM (IST)

விஜய்யின் வருகைக்காக புதிய சோபா வாங்கவில்லை - திருமாவளவன் விளக்கம்!
வியாழன் 14, மே 2026 3:55:53 PM (IST)

தமிழகத்தில் 200 யூனிட் இலவச மின்சாரம் அமல்: புதிய மின்சாரக் கட்டணப் பட்டியல் வெளியீடு!
வியாழன் 14, மே 2026 3:49:19 PM (IST)

மகளிர் உரிமைத் தொகை வழங்காமல் இழுத்தடிப்பு : முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
வியாழன் 14, மே 2026 3:40:18 PM (IST)

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 60 சதவீதமாக உயர்வு - முதல்வர் விஜய் உத்தரவு!
வியாழன் 14, மே 2026 3:30:06 PM (IST)

தெற்கு ரயில்வேயின் புதிய தலைமை மக்கள் தொடர்பு அதிகாரியாக எஸ்.என். நரேன் நியமனம்!
புதன் 13, மே 2026 8:10:40 PM (IST)


