» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மக்கள் நலப்பணிகள், வளர்ச்சித் திட்டங்கள் தொடரும் : மேயர் மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!

வெள்ளி 8, மே 2026 8:12:59 AM (IST)

தேர்தல் நடத்தை விதிகள் விலக்கிக்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, தூத்துக்குடி மாநகராட்சியில் நிலுவையில் உள்ள மக்கள் நலப்பணிகள் மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் போர்க்கால அடிப்படையில் மீண்டும் தொடங்கப்படும் என மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களைச் சந்தித்த மேயர் ஜெகன் பெரியசாமி கூறியதாவது: தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிகள் மே 7-ஆம் தேதி காலை அதிகாரப்பூர்வமாகத் திரும்பப் பெறப்பட்டுள்ளன. இதனால், இன்று (வெள்ளிக்கிழமை) முதல் எனது நேரடி மக்கள் பணிகள் மீண்டும் தொடங்குகின்றன.

தற்போது கோடைக்காலம் நிலவுவதால், மாநகரப் பகுதி மக்களுக்குத் தடையின்றிச் சீரான குடிநீர் விநியோகம் செய்வதை உறுதி செய்ய அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தப்பட உள்ளது. இதற்கான உரிய நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்படும். தேர்தல் அறிவிப்புக்கு முன்பாகத் தொடங்கப்பட்டு, இடையில் நிறுத்தப்பட்டிருந்த சாலை மேம்பாட்டுப் பணிகளை மீண்டும் துரிதப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் துறைமுகம் இணைந்து புதிய துறைமுகக் கடற்கரைப் பகுதியில் நவீன வசதிகளுடன் அமைத்து வரும் பூங்கா பணிகள் மற்றும் நீச்சல் குளம் கட்டுமானப் பணிகள் விரைந்து முடிக்கப்படும். திமுக தலைவருக்கும், கட்சித் தலைமைக்கும் பெருமை சேர்க்கும் வகையில் எங்களது மக்கள் பணிகள் அர்ப்பணிப்புடன் தொடரும்" என்றும் மேயர் ஜெகன் பெரியசாமி இந்தச் சந்திப்பின் போது உறுதிபடத் தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory