» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடி - கச்சிகுடா எக்ஸ்பிரஸ் மாற்றுப்பாதையில் இயக்கம் : தெற்கு ரயில்வே அறிவிப்பு!
வெள்ளி 1, மே 2026 8:43:48 AM (IST)
மதுரை ரயில்வே கோட்டத்தில் மேற்கொள்ளப்பட உள்ள பராமரிப்பு பணிகள் காரணமாக, தூத்துக்குடியில் இருந்து ஹைதராபாத் (கச்சிகுடா) செல்லும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் மே மற்றும் ஜூன் மாதங்களில் சில நாட்களில் மாற்றுப்பாதையில் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக மதுரை மற்றும் திண்டுக்கல் வழியாகச் செல்லும் இந்த ரயில், பராமரிப்பு பணிகள் காரணமாக அந்த நிலையங்களைத் தவிர்த்து மாற்றுப்பாதையில் இயக்கப்படும். அதன்படி, தூத்துக்குடியில் இருந்து புறப்படும் ரயில் விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி மற்றும் திருச்சி வழியாகச் செல்லும்.
தூத்துக்குடியில் இருந்து காலை 7:40 மணிக்குப் புறப்படும் இந்த ரயில் (வண்டி எண்: 07606), மே மாதம்: 06.05.2026, 13.05.2026, 27.05.2026. ஜூன் மாதம்: 03.06.2026 ஆகிய தேதிகளில் மாற்றுப்பாதையில் இயங்கும்: மாற்றுப்பாதையில் இயக்கப்படுவதால், பயணிகளின் வசதிக்காக இந்த ரயில் மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை ஆகிய நிலையங்களில் கூடுதலாக நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது:
இந்த வழித்தடத்தில் பயணம் செய்யத் திட்டமிட்டுள்ள பயணிகள் கால மாற்றங்கள் மற்றும் கூடுதல் நிறுத்தங்களைக் கவனத்தில் கொள்ளுமாறு தெற்கு ரயில்வே கேட்டுக்கொண்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மே 4-ல் வாக்கு எண்ணிக்கை: வேட்பாளர்கள், முகவர்களுக்கான வழிகாட்டுதல்கள் வெளியீடு!
வெள்ளி 1, மே 2026 12:27:16 PM (IST)

தூத்துக்குடியில் கல்லூரி அருகே புகையிலை பொருட்கள் மதுபாட்டில்கள் விற்பனை - ஒருவர் கைது
வெள்ளி 1, மே 2026 12:16:02 PM (IST)

பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்: லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!
வெள்ளி 1, மே 2026 11:51:27 AM (IST)

வெப்ப அலையிலிருந்து பயிர்களைப் பாதுகாக்க திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அறிவுரை!
வெள்ளி 1, மே 2026 10:30:26 AM (IST)

வணிகப் பயன்பாட்டு கேஸ் சிலிண்டர் விலை வரலாறு காணாத உயர்வு : இன்று முதல் அமல்!
வெள்ளி 1, மே 2026 10:21:34 AM (IST)

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: டீ மாஸ்டருக்கு 16 ஆண்டு சிறை – போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு!
வெள்ளி 1, மே 2026 8:50:14 AM (IST)


