» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தமிழகத்தில் சிலிண்டர் விநியோகக் காத்திருப்புக் காலம் அதிரடியாகக் குறைப்பு: பொதுமக்கள் மகிழ்ச்சி!
புதன் 29, ஏப்ரல் 2026 10:17:53 AM (IST)
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சமையல் எரிவாயு (LPG) சிலிண்டர் விநியோகத்திற்கான காத்திருப்புக் காலம் பெரும்பாலான பகுதிகளில் 5 நாட்களுக்கும் குறைவாகக் குறைக்கப்பட்டுள்ளது என்று எண்ணெய் நிறுவனங்களின் மாநில ஒருங்கிணைப்பாளர் வி.சி. அசோகன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகம் மற்றும் புதுச்சேரி முழுவதும் இந்தியன் ஆயில் (IOC), பாரத் பெட்ரோலியம் (BPC), ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் (HPC) ஆகிய நிறுவனங்களின் எரிபொருள் விற்பனை நிலையங்களில் (பெட்ரோல் பங்க்குகள்), பெட்ரோல் மற்றும் டீசல் போதுமான அளவில் கையிருப்பில் உள்ளன. எனவே, பொதுமக்கள் எவ்வித பதற்றமும் அடையத் தேவையில்லை.
எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் முதல் விநியோக முனையங்கள், கிடங்குகள் மற்றும் சில்லறை விற்பனை நிலையங்கள் வரை அனைத்து விநியோகச் சங்கிலிகளும் தடையின்றி இயங்கி வருகின்றன. மாநிலம் முழுவதும் எரிபொருள் இருப்பு நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, தடையற்ற விநியோகம் உறுதி செய்யப்படுகிறது.
அதேபோல், தமிழகம் முழுவதும் வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தையும் எண்ணெய் நிறுவனங்கள் தடையின்றி மேற்கொண்டு வருகின்றன. எண்ணெய் நிறுவனங்களின் தொடர் முயற்சி மற்றும் தமிழக அரசின் தீவிரக் கண்காணிப்பு காரணமாக, பெரும்பாலான இடங்களில் சிலிண்டர் விநியோகத்திற்கான காத்திருப்புக் காலம் 5 நாட்களுக்கும் குறைவாக மாற்றப்பட்டுள்ளது. "விநியோக கால அளவை மேலும் குறைப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.
வாகனங்களுக்குப் பயன்படுத்தப்படும் 'ஆட்டோ எல்.பி.ஜி'யும் எண்ணெய் நிறுவனங்களின் பங்க்குகளில் போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இதன் தடையற்ற விநியோகத்தை உறுதி செய்யக் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வாக்களிக்கச் சென்றவர் சாலை விபத்தில் உயிரிழப்பு : குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் இழப்பீடு கோரிக்கை!
புதன் 29, ஏப்ரல் 2026 12:15:23 PM (IST)

13 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: தந்தைக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை!
புதன் 29, ஏப்ரல் 2026 11:37:36 AM (IST)

விவசாயி மீது துப்பாக்கிச் சூடு: சார் ஆட்சியர் ஆஜராகி விளக்கம் - உயர்நீதிமன்றம் விசாரணை
புதன் 29, ஏப்ரல் 2026 11:33:46 AM (IST)

மதுரையில் சித்திரை திருவிழா தேரோட்டம் : லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்!
புதன் 29, ஏப்ரல் 2026 10:44:57 AM (IST)

தூத்துக்குடியில் வெள்ளத் தடுப்பு நடவடிக்கை: பக்கிள் ஓடை அகலப்படுத்தும் பணிகளை ஆணையர் ஆய்வு
புதன் 29, ஏப்ரல் 2026 8:41:11 AM (IST)

விஜய் முதல்வராவார்... 200+ தொகுதிகளில் தவெக வெல்லும் - செங்கோட்டையன் பேட்டி!
செவ்வாய் 28, ஏப்ரல் 2026 5:44:41 PM (IST)
_1777377317.jpg)

