» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபர் அடித்துக் கொலை : பெண் உட்பட 3 பேர் கைது!
செவ்வாய் 14, ஏப்ரல் 2026 9:27:49 PM (IST)
தூத்துக்குடி அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபர் ஒருவர் மரக்கட்டையால் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், அவருடன் தொடர்பில் இருந்த பெண் உள்ளிட்ட மூவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம், மணியாச்சி அருகே மகாராஜபுரம் காலனி தெருவைச் சேர்ந்தவர் கணேசன் (25). இவர் நேற்று அந்தப் பகுதியில் உள்ள கல்லறை அருகே மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது நெற்றி, வலது தொடை மற்றும் இரண்டு கால்களிலும் பலத்த காயங்கள் இருந்தன. தகவல் அறிந்து வந்த மணியாச்சி போலீசார், உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த மரணம் குறித்துத் துணைக் காவல் கண்காணிப்பாளர் மேற்பார்வையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில், அதே பகுதியைச் சேர்ந்த கனகவல்லி (33) என்பவருடன் கணேசனுக்கு கடந்த ஓராண்டாகத் தவறான உறவு இருந்தது தெரியவந்தது. சந்தேகத்தின் அடிப்படையில் கனகவல்லியிடம் நடத்திய விசாரணையில் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
கனகவல்லி அளித்த வாக்குமூலத்தில் "கணேசனுடன் ஓராண்டாகத் தொடர்பு இருந்தது. ஆனால், அவர் அடிக்கடி உடலுறவிற்கு வற்புறுத்தி எனக்கு அழுத்தம் கொடுத்து வந்தார். இதனால் ஆத்திரமடைந்த நான், இது குறித்து எனது சகோதரர் மகனிடம் கூறினேன். அவரைத் தீர்த்துக்கட்டத் திட்டமிட்டோம்.
திட்டத்தின்படி, நேற்று இரவு 11 மணி அளவில் கணேசனைச் சம்பவ இடத்திற்கு வருமாறு கனகவல்லி அழைத்துள்ளார். அங்கு கணேசன் வந்தபோது, மறைந்திருந்த கனகவல்லியின் உறவினர் மற்றும் அவரது நண்பர் ஆகிய இருவரும் மரக்கட்டையால் கணேசனைச் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த கணேசன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
இந்தக் கொலை தொடர்பாகக் கனகவல்லி மற்றும் தலைமறைவாக இருந்த மற்ற இருவரையும் போலீசார் கைது செய்தனர். கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட மரக்கட்டைகளையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். தவறான உறவால் ஏற்பட்ட தொல்லை காரணமாகத் திட்டமிட்டு வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கூட்டமெல்லாம் குடும்பமாகாது, திராவிடக் குடும்பமே நிலையானது: விஜய் மீது கமல்ஹாசன் விமர்சனம்!
வியாழன் 16, ஏப்ரல் 2026 11:59:09 AM (IST)

ஏப். 17 முதல் கோடை விடுமுறை: மாணவர்கள், பெற்றோர்களுக்கான முக்கிய அறிவுறுத்தல்கள்!
வியாழன் 16, ஏப்ரல் 2026 11:14:02 AM (IST)

தொகுதி மறுவரையறை மசோதா நகல் எரிப்பு : கருப்பு உடை அணிந்து முதல்வர் போராட்டம்!
வியாழன் 16, ஏப்ரல் 2026 11:03:22 AM (IST)

தவெக வேட்பாளர் பிரசாரத்தில் ரகளை: அஜிதா ஆக்னல் உட்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு!
வியாழன் 16, ஏப்ரல் 2026 10:50:05 AM (IST)

தமிழகத்தைப் புறக்கணிக்கும் பாஜக அரசுக்கு தேர்தலில் பாடம் புகட்டுவோம்: உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
வியாழன் 16, ஏப்ரல் 2026 8:03:53 AM (IST)

அண்ணாமலை ஹெலிகாப்டரில் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை!
வியாழன் 16, ஏப்ரல் 2026 7:53:19 AM (IST)

