» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
திமுக எனும் தீயசக்தியை ஒழிக்க அதிமுக கூட்டணியே ஒரே வழி : டிடிவி தினகரன் பிரச்சாரம்!
செவ்வாய் 14, ஏப்ரல் 2026 4:31:36 PM (IST)
திமுக என்கிற தீய சக்தியை வீட்டிற்கு அனுப்பக்கூடிய ஒரே சக்தி அதிமுக கூட்டணிதான் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பிரசாரத்தில் பேசினார்.
திருவையாறு தேரடியில் அமமுக வேட்பாளர் வேலு கார்த்திகேயனை ஆதரித்து, குக்கர் சின்னத்திற்கு வாக்கு சேகரித்த தினகரன் பேசியதன் முக்கிய அம்சங்கள்: திருவையாறு மக்கள் எத்தனை முறைதான் திமுகவிற்கு வாக்களிப்பீர்கள் என்று கேள்வி எழுப்பிய தினகரன், திமுக ஆட்சியில் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை எனச் சாடினார். "மு.க. ஸ்டாலினும், அவர் மகன் உதயநிதியும் செங்கலைத் தூக்கிக் கொண்டு எய்ம்ஸ் குறித்துப் பேசுகிறார்கள்.
ஆனால் எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோதுதான் தமிழகத்திற்கு 11 மருத்துவக் கல்லூரிகள் வந்தன" என்று அவர் சுட்டிக்காட்டினார். நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று கூறி மக்களை ஏமாற்றி வருவதாகக் குறிப்பிட்ட அவர், பழைய தேர்தல் வாக்குறுதிகளில் 80 சதவீதத்தை திமுக நிறைவேற்றவில்லை என்று குற்றம் சாட்டினார். மக்களைப் பணத்தைக் கொடுத்து விலைக்கு வாங்கிவிடலாம் என்று திமுக நினைப்பதாக அவர் விமர்சித்தார்.
"எடப்பாடி பழனிசாமி ஆட்சிக் காலத்தில்தான் டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டது. இல்லையென்றால் இந்தப் பகுதியில் தொழிற்சாலைகள் வந்திருக்கும்" என்று டெல்டா விவசாயிகளின் நலன் காக்கப்பட்டதை நினைவு கூர்ந்தார்.
திமுக எனும் தீய சக்தியை வீழ்த்த அதிமுக கூட்டணிக்கு வலிமை இருப்பதாகக் குறிப்பிட்ட தினகரன், வரும் தேர்தலில் குக்கர் சின்னத்தில் வாக்களித்து வேலு கார்த்திகேயனைப் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழக எம்.பி. தொகுதிகள் 59 ஆக உயரும்; குறைய வாய்ப்பில்லை: அண்ணாமலை விளக்கம்!
செவ்வாய் 14, ஏப்ரல் 2026 5:40:37 PM (IST)

திருப்பூரில் விஜய் பிரசாரம்: வெயில் தாங்காமல் 7 பெண்கள் உட்பட 9 பேர் மயங்கி விழுந்தனர்!
செவ்வாய் 14, ஏப்ரல் 2026 5:31:42 PM (IST)

மத்திய அரசின் திட்டங்களைத் திமுக மறைக்கிறது : முதல்வர் ஸ்டாலினுக்கு பாஜக பதில்!
செவ்வாய் 14, ஏப்ரல் 2026 4:42:22 PM (IST)

தமிழ்நாட்டுக்கு ஆபத்து எப்போதும் வடக்கிலிருந்துதான் வரும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம்!
செவ்வாய் 14, ஏப்ரல் 2026 12:54:58 PM (IST)

கனிமொழி எம்பி காரில் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை: விளாத்திகுளம் அருகே பரபரப்பு!
செவ்வாய் 14, ஏப்ரல் 2026 12:26:51 PM (IST)

திட்டமிட்ட துப்பாக்கிச் சூடா? - சிசிடிவி காட்சிகளால் ஆலங்குளம் விவகாரத்தில் திடீர் திருப்பம்!
செவ்வாய் 14, ஏப்ரல் 2026 11:04:49 AM (IST)

