» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திருச்செந்தூரில் கே.ஆர்.எம். ராதாகிருஷ்ணன் : பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

வெள்ளி 3, ஏப்ரல் 2026 3:12:14 PM (IST)

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாரதிய ஜனதா கட்சி போட்டியிடும் தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது. 

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. கடந்த திங்கள்கிழமை முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், ஏப்ரல் 6-ஆம் தேதி வேட்புமனு தாக்கலுக்கு கடைசி நாளாகும்.இந்த நிலையில், பாரதிய ஜனதா கட்சி போட்டியிடும் தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது. 

பாஜக வேட்பாளர்களின் முழு விவரம்:

பாஜக வெளியிட்டுள்ள பட்டியலில் இடம்பெற்றுள்ள 27 வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் தொகுதிகள் பின்வருமாறு:

ஆவடி ராஜசிம்ம மகிந்திரா

மயிலாப்பூர் தமிழிசை சௌந்தரராஜன்

தளி டாக்டர் நாகேஷ் குமார்

திருவண்ணாமலை சி. ஏழுமலை

ராசிபுரம் (தனி) டாக்டர் எஸ்.டி. பிரேம்குமார்

மொடக்குறிச்சி கிருத்திகா சிவக்குமார்

உதகை போஜ ராஜன்

அவிநாசி (தனி) எல். முருகன்

திருப்பூர் தெற்கு தங்கராஜ்

கோவை வடக்கு வானதி சீனிவாசன்

திருவாரூர் கோவி சந்துரு

தஞ்சாவூர் எம். முருகானந்தம்

கந்தர்வக்கோட்டை உதயகுமார்

புதுக்கோட்டை ராமச்சந்திரன்

அறந்தாங்கி கவிதா ஸ்ரீகாந்த்

திருப்பத்தூர் கே.சி. திருமாறன்

மானாமதுரை பால கணபதி

மதுரை தெற்கு ராம சீனிவாசன்

சாத்தூர் நயினார் நாகேந்திரன்

ராமநாதபுரம் கே. நாகேந்திரன்

திருச்செந்தூர் கே.ஆர்.எம். ராதாகிருஷ்ணன்

வாசுதேவநல்லூர் (தனி) ஆனந்தன் ஐயாசாமி

ராதாபுரம் பாலகிருஷ்ணன்

நாகர்கோவில் எம்.ஆர். காந்தி

குளச்சல் டி. சிவக்குமார்

பத்மநாபபுரம் பி. ரமேஷ்

விளவங்கோடு எஸ். விஜயதரணி

வேட்பாளர் தேர்வில் நிலவிய ஆலோசனைகள் காரணமாக பட்டியல் வெளியாவதில் சற்று தாமதம் ஏற்பட்டது. குறிப்பாக, மாநிலத் தலைவர் அண்ணாமலை போட்டியிடும் தொகுதி குறித்து இழுபறி நீடித்ததாகக் கூறப்பட்ட நிலையில், தற்போது வெளியாகியுள்ள பட்டியலில் அவரது பெயர் இடம்பெறவில்லை.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory