» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நெல்லைக்கு பதில் சாத்தூரில் போட்டி: பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தொகுதி மாற்றம்!

வெள்ளி 27, மார்ச் 2026 5:14:00 PM (IST)

பாஜகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் பட்டியல் வெளியாவதற்கு முன்பே, மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தான் போட்டியிடும் தொகுதியை உறுதி செய்துள்ளார்.

தமிழகச் சட்டமன்றப் பொதுத்தேர்தல் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாரதிய ஜனதா கட்சிக்கு 27 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், பாஜகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் பட்டியல் வெளியாவதற்கு முன்பே, மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தான் போட்டியிடும் தொகுதியை உறுதி செய்துள்ளார்.

இன்று செய்தியாளர்களைச் சந்தித்த நயினார் நாகேந்திரன், "தேசிய ஜனநாயகக் கூட்டணி அனைத்துத் தொகுதிகளிலும் நிச்சயம் வெற்றி பெறும். இந்த முறை நான் சாத்தூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட உள்ளேன்" எனத் தெரிவித்தார்.

பாஜக போட்டியிடும் 27 தொகுதிகளின் பட்டியலில் ஏற்கனவே திருநெல்வேலிக்கு பதிலாக சாத்தூர் இடம்பெற்றிருந்த நிலையில், நயினார் நாகேந்திரனின் இந்த அறிவிப்பு அதனை உறுதிப்படுத்தியுள்ளது.

தொகுதி மாற்றத்திற்கான பின்னணி:

நயினார் நாகேந்திரன் தனது சொந்த மாவட்டமான நெல்லையை விட்டு விருதுநகர் மாவட்டத்தின் சாத்தூர் தொகுதிக்கு மாறியதற்கு அரசியல் விமர்சகர்கள் இரு முக்கியக் காரணங்களைக் குறிப்பிடுகின்றனர்:

நெல்லை 'சென்டிமென்ட்': 1962-ஆம் ஆண்டிற்குப் பிறகு திருநெல்வேலி தொகுதியில் வெற்றி பெற்ற எவரும் அடுத்த தேர்தலில் மீண்டும் வென்றதாகச் சரித்திரம் இல்லை. 2001 முதல் தொடர்ந்து அங்கு போட்டியிட்டு வரும் நயினார் நாகேந்திரனுக்கும் இந்தச் சூழல் பொருந்தும் என்பதால், 'சென்டிமென்ட்' காரணமாக அவர் தொகுதி மாறியதாகக் கருதப்படுகிறது.

சாத்தூர் தொகுதியில் கணிசமாக உள்ள முக்குலத்தோர் சமூக வாக்கு வங்கியை இலக்கு வைத்து அவர் அங்கு களம் இறங்குகிறார். இதற்கான ரகசியப் பணிகளை கடந்த 6 மாதங்களாகவே அவர் அங்கு மேற்கொண்டு வந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory