» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
குளத்தில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழப்பு: தாங்க முடியாத துயரத்தில் தாய் தற்கொலை!
புதன் 25, மார்ச் 2026 5:08:57 PM (IST)
விழுப்புரம் அருகே, குளத்தில் மூழ்கி இரண்டு மகள்கள் உயிரிழந்த துயரம் தாளாமல் தாய் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் கீழ்புத்துப்பட்டு சாவடி தீர்த்தவாரி வீதியைச் சேர்ந்தவர் அய்யனார். இவரது முதல் மனைவி கவிதா இறந்துவிட்ட நிலையில், சென்னையைச் சேர்ந்த ஜெயந்தி என்பவரை இரண்டாவதாகத் திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியருக்கு ஹர்ஷினி (11), கயல் (8) ஆகிய இரு மகள்கள் இருந்தனர். இவர்கள் காலாப்பட்டு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தனர்.
கடந்த 14-ஆம் தேதி கீழ்புத்துப்பட்டு இ.சி.ஆர். சாலையில் உள்ள அங்காளம்மன் கோவில் திருவிழாவிற்குச் சென்ற ஹர்ஷினி மற்றும் கயல் ஆகிய இரு சிறுமிகளும், அங்கிருந்த குளத்தில் தாமரைப்பூ பறிக்க முயன்றபோது எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கிப் பரிதாபமாக உயிரிழந்தனர். கோவில் திருவிழாவின்போது நடந்த இந்த விபத்து அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இரு மகள்களையும் பறிகொடுத்த தாய் ஜெயந்தி, கடந்த சில நாட்களாக அவர்களின் நினைவாகவே அழுதுகொண்டு பெரும் வேதனையில் இருந்துள்ளார். உறவினர்களும் அக்கம்பக்கத்தினரும் அவருக்கு ஆறுதல் கூறித் தேற்றி வந்தனர்.
இந்நிலையில், நேற்று காலையில் அய்யனார் வயலுக்குச் சென்றுவிட்டு மதியம் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டில் தனியாக இருந்த ஜெயந்தி மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். அதிர்ச்சியடைந்த அய்யனார் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டபோது, ஜெயந்தி ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கோட்டக்குப்பம் காவல்துறையினர், ஜெயந்தியின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக கனகசெட்டிக்குளத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இரண்டு சிறுமிகளைத் தொடர்ந்து தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த கிராமத்தையே நிலைகுலையச் செய்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ஆம் தேதி நெல்லையில் மதுக் கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
புதன் 25, மார்ச் 2026 5:48:47 PM (IST)

டார்ச் லைட் சின்னத்திலேயே மநீம போட்டியிட அனுமதி: முதல்வருக்கு திருமா கோரிக்கை!
புதன் 25, மார்ச் 2026 5:34:24 PM (IST)

திரையரங்குகள், தொலைக்காட்சிகளில் விஜய் படங்களுக்கு தடை: தேர்தல் ஆணையத்தில் மனு!
புதன் 25, மார்ச் 2026 5:12:30 PM (IST)

தமிழகம் முழுவதும் 22 லட்சம் பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா : அமைச்சர் கீதா ஜீவன் பேச்சு!
புதன் 25, மார்ச் 2026 4:16:52 PM (IST)

அதிமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு நிறைவு: கூட்டணிக் கட்சிகள் தொகுதிகள் முழு விவரம்!
புதன் 25, மார்ச் 2026 3:52:25 PM (IST)

தனியார் வாகனங்களில் ஸ்ட்ரோப் விளக்குகள் அகற்றம் : தூத்துக்குடியில் போலீசார் அதிரடி!
செவ்வாய் 24, மார்ச் 2026 9:07:03 PM (IST)

