» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மாணவி கொலை வழக்கு: ஆய்வாளர் சஸ்பெண்ட் - நெல்லை சரக டிஐஜி உத்தரவு

வியாழன் 12, மார்ச் 2026 10:58:24 AM (IST)

வேடநத்தம் பிளஸ்-2 மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த பிளஸ்-2 மாணவி  கடந்த 11-ம் தேதி மாயமான மாணவியைக் கண்டுபிடித்துத் தருமாறு அவரது பெற்றோர் விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால், காவல் ஆய்வாளர் பிரவீனா, புகாரை முறையாக விசாரணை செய்யாமல் அலைக்கழித்ததாக கூறப்படுகிறது. 

காவல்துறையினரின் இந்த அலட்சியமே மாணவியின் உயிரிழப்பிற்கு முக்கியக் காரணமாக அமைந்ததாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டினர். பெற்றோரை அலட்சியப்படுத்தியது மற்றும் கடமை தவறியது தொடர்பான புகார்களின் அடிப்படையில், நெல்லை சரக டிஐஜி சரவணன் விசாரணை மேற்கொண்டார். அதன் அடிப்படையில், காவல் ஆய்வாளர் பிரவீனாவை பணியிடை நீக்கம் செய்து இன்று உத்தரவிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory