» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ஆதிநாதர் ஆழ்வார் கோவில் மாசித்திருவிழா: இரட்டை திருப்பதியில் சாத்துமுறை வைபவம் கோலாகலம்
புதன் 11, மார்ச் 2026 8:31:03 AM (IST)

ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவில் மாசித்திருவிழாவை முன்னிட்டு, நம்மாழ்வார் முன்னிலையில் இரட்டை திருப்பதியில் சாத்துமுறை வைபவம் நேற்று மிகச்சிறப்பாக நடைபெற்றது.
தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள நவதிருப்பதி தலங்களில் 9-வது தலமான ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில், கடந்த மாதம் 26-ஆம் தேதி மாசித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வுகளான தேரோட்டம் மார்ச் 6-ஆம் தேதியும், தெப்பத்திருவிழா மார்ச் 7 மற்றும் 8-ஆம் தேதிகளிலும் நடைபெற்றன. கடந்த 9-ஆம் தேதி தாமிரபரணி ஆற்றில் தீர்த்தவாரி நடைபெற்றது.
பழங்கால நடைமுறைப்படி, மார்கழி அத்யயன உற்சவத்தின் போது ஸ்ரீரங்கத்திலிருந்து நம்மாழ்வார் எழுந்தருளி சாத்துமுறை நடைபெறுவது வழக்கம். தற்போது அந்த நடைமுறை மாற்றப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் மாசித் திருவிழா முடிந்த மறுநாள் நம்மாழ்வார் இரட்டை திருப்பதிக்கு எழுந்தருளி சாத்துமுறை நடைபெற்று வருகிறது.
அதன்படி நேற்று அதிகாலை 5 மணிக்கு நம்மாழ்வார் விஸ்வரூபம் மற்றும் நித்யல் கோஷ்டி நடைபெற்றது. காலை 7:50 மணிக்கு ஆழ்வார்திருநகரியிலிருந்து புறப்பட்ட நம்மாழ்வார், இரட்டை திருப்பதி சென்றடைந்தார். அங்கு மாலை 4 மணிக்கு தேவர்பிரான், ஸ்ரீதேவி மற்றும் பூதேவி சமேதராக நம்மாழ்வாருடன் மண்டபத்தில் எழுந்தருளினார்.
நம்மாழ்வார் முன்னிலையில் தேவர்பிரான் சாத்துமுறை வைபவம் கோலாகலமாக நடைபெற்றது. தொடர்ந்து தீபாராதனை காட்டப்பட்டு, பக்தர்களுக்குத் தீர்த்தம், சடாரி மற்றும் துளசி பிரசாதம் வழங்கப்பட்டது. இரவு நம்மாழ்வார் மீண்டும் ஆழ்வார்திருநகரிக்கு வந்தடைந்தார்.
இந்த நிகழ்வில் எம்பெருமானார் ஜீயர், ஸ்தலத்தார்கள் ஸ்ரீதர், சந்தானம், வாசு, கஸ்தூரி ரங்கன், கள்ளப்பிரான் கோவில் ஸ்தலத்தார் ராஜப்பா வெங்கடாச்சாரி, நிர்வாக அதிகாரி சதீஷ், ஆய்வாளர் நம்பி மற்றும் அர்ச்சகர்கள் உட்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆர்டர்லி முறை ஒழிப்பு: மாவட்ட ஆட்சியர்கள் கடும் நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
புதன் 11, மார்ச் 2026 11:38:12 AM (IST)

தமிழகத்தில் கழித்த நாட்கள் என் வாழ்வின் பொற்காலம்: ஆளுநர் ஆர்.என்.ரவி நெகிழ்ச்சி!!
புதன் 11, மார்ச் 2026 11:16:05 AM (IST)

கோவை அரசுப்பள்ளி உணவில் பல்லி: 43 மாணவர்கள் பாதிப்பு - இபிஎஸ் கண்டனம்!
புதன் 11, மார்ச் 2026 10:55:14 AM (IST)

நெல்லையில் 11 இடங்களில் சோதனைச்சாவடி: எல்லை பாதுகாப்பு படையினர் தீவிர வாகன சோதனை!
புதன் 11, மார்ச் 2026 8:40:02 AM (IST)

பெட்ரோல் பங்க் ஊழியரை மிரட்டிவிட்டு தப்பிய மர்ம நபர்கள்: போலீசார் தீவிர விசாரணை
புதன் 11, மார்ச் 2026 8:27:39 AM (IST)

மானாமதுரை விசாரணை கைதி மரண வழக்கு: சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு டி.ஜி.பி. உத்தரவு
செவ்வாய் 10, மார்ச் 2026 8:11:37 PM (IST)

