» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ஒரே கப்பலில் 147 காற்றாலை இறகுகள்: வ.உ.சி துறைமுகம் வரலாற்றுச் சாதனை!
திங்கள் 9, மார்ச் 2026 4:31:25 PM (IST)

தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுக ஆணையம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி சரக்குகளைக் கையாளுவதில் புதிய தேசிய சாதனையைப் படைத்துள்ளது.
இந்தியாவிலேயே முதல்முறையாக ஒரே கப்பலில் இருந்து 147 காற்றாலை இறகுகள் மற்றும் அதன் உதிரிபாகங்களை கையாண்டு தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுகம் வரலாற்றுச் சாதனை நிகழ்த்தியுள்ளது. இதற்கு முன்பு, கடந்த 2025-ம் ஆண்டு நவம்பர் 21-ம் தேதி ஒரே கப்பலில் 103 காற்றாலை இறகுகளைக் கையாண்டதே சாதனையாக இருந்தது.
தற்போது அந்தச் சாதனையை வ.உ.சி துறைமுகம் முறியடித்துள்ளது. சீனாவின் 'சின்சோ' (Qinzhou) துறைமுகத்திலிருந்து 'எம்.வி. போ ரன் ஜியூ சோ'என்ற கப்பல் மூலம் கொண்டு வரப்பட்ட, தலா 76 மீட்டர் நீளமுள்ள இந்த 147 இறகுகளும் மார்ச் 8-ம் தேதி வெற்றிகரமாக இறக்கி முடிக்கப்பட்டன.75% அதிரடி வளர்ச்சிஇந்த நிதியாண்டில் பிப்ரவரி 2026 வரை வ.உ.சி துறைமுகம் மொத்தம் 4,211 காற்றாலை இறகுகளைக் கையாண்டுள்ளது.
இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் (2,395 இறகுகள்) ஒப்பிடுகையில் 75.82% வளர்ச்சியாகும்.காற்றாலை இறகுகளைக் கையாளுவதில் இந்தியாவின் முன்னணி துறைமுகமாகத் திகழும் வ.உ.சி துறைமுகம், தனது உள்கட்டமைப்பை மேலும் மேம்படுத்தி வருகிறது. துறைமுகத்தின் உட்பகுதியில் 60,000 சதுர மீட்டர் கூடுதல் சேமிப்பு இடம் உருவாக்கப்பட்டுள்ளது. வெளிப்புறத்தில் மேலும் 1,80,000 சதுர மீட்டர் பரப்பளவு சேமிப்பு வசதிக்காக ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்தச் சாதனையை சாத்தியமாக்கிய இறக்குமதியாளர்கள் மற்றும் முகவர்களுக்கு வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையத்தின் தலைவர்சுசாந்த குமார் புரோஹித் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். பாரத பிரதமர் நரேந்திர மோடியின் 'Maritime Amrit Kaal Vision 2047' திட்டத்தின்படி, சுற்றுச்சூழலுக்கு உகந்த கடல்சார் துறையை உருவாக்க இத்துறைமுகம் உறுதியுடன் செயல்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழக அரசு அச்சுத்துறையில் வேலை: 10-ம் வகுப்பு மற்றும் ஐடிஐ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!
திங்கள் 9, மார்ச் 2026 5:49:45 PM (IST)

மாநிலங்களவைத் தேர்தல்: தம்பிதுரை, திருச்சி சிவா உள்ளிட்ட 6 பேர் போட்டியின்றித் தேர்வு!
திங்கள் 9, மார்ச் 2026 4:56:43 PM (IST)

தமிழக அரசைக் கண்டித்து மார்ச் 12-ல் ஆர்ப்பாட்டம் : தமிழக வெற்றிக் கழகம் அறிவிப்பு!
திங்கள் 9, மார்ச் 2026 4:51:47 PM (IST)

விவசாயிகளிடம் ரூ.1.5 கோடி மோசடி: ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
திங்கள் 9, மார்ச் 2026 4:02:44 PM (IST)

தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல்: மார்ச் 15-ல் தேதி அறிவிக்கப்பட வாய்ப்பு!
திங்கள் 9, மார்ச் 2026 3:52:31 PM (IST)

தூத்துக்குடி எண்ணெய் ஆலை வளாகத்தில் பயங்கர தீ விபத்து: தீயணைப்பு பணிகள் தீவிரம்
திங்கள் 9, மார்ச் 2026 12:57:56 PM (IST)

