» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

வீடுபுகுந்து காவலரே பெண்ணிடம் பாலியல் அத்துமீறல் : டிடிவி தினகரன் கண்டனம்!

சனி 7, மார்ச் 2026 5:11:27 PM (IST)

சென்னையில் காவலர் ஒருவரே பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவத்திற்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ளதாவது: சென்னையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, குடிபோதையில் இருந்த காவலர் ஒருவர் ராயப்பேட்டையில் உள்ள வீட்டிற்குள் புகுந்து அங்கிருந்த பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. பெண்களைக் காக்க வேண்டிய சீருடை அணிந்த காவலர்களே, மதுபோதையில் அவர்களின் பாதுகாப்பைப் பறிக்கும் கொடூரர்களாக மாறி வருவது நெஞ்சை உலுக்குகிறது.

தமிழகம் எங்கும் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதால், பெண்கள் வீட்டிற்குள் கூட பாதுகாப்பாக இருக்க முடியாத கொடூரமான நிலை நிலவுகிறது. திமுக நிர்வாகிகள் சிலரின் அடாவடித்தனம், கஞ்சா போதையில் திரியும் இளைஞர்கள், போதையில் தடம் மாறும் காவலர்கள், எனப் பெண்களின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கும் நபர்களை, திமுக அரசு தனது நிர்வாகத் திறமையின்மையால் வளர்த்து வருவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கைக் காக்கத் தவறிய 'போதை மாடல்' திமுக அரசை மக்கள் துரத்தியடித்து, தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் நாள் வெகுதொலைவில் இல்லை என்றும் தனது பதிவில் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory