» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
மத்திய பட்ஜெட்டை விமர்சித்து ஒட்டப்பட்ட போஸ்டர் கிழிப்பு: பாஜகவினர் 23 பேர் கைது!
வெள்ளி 6, பிப்ரவரி 2026 11:51:28 AM (IST)

கோவையில் மத்திய அரசின் பட்ஜெட்டை விமர்சித்து ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களைக் கிழித்ததாக பாஜகவைச் சேர்ந்த 23 பேரை போலீசார் கைது செய்தனர்.
மத்திய பட்ஜெட்டில், தமிழகத்துக்கு போதிய நிதி ஒதுக்க வில்லை எனக்கூறி, கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் திமுக சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. அதில் பாஜக-அதிமுக தமிழகத்துக்கு ஒதுக்கிய நிதி முட்டை என்றும், ‘பட்ஜெட் 2026 ஒரு பூஜ்யம்’ என்ற வாசகங்களும் இடம்பெற்றிருந்தன.
குறிப்பாக சிங்காநல்லூர், கணபதி பகுதிகளில் அதிக அளவில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. இந்த போஸ்டர்களை பாஜக இளைஞரணியை சேர்ந்த சிலர் கிழித்துள்ளனர். இதுகுறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் சுவரொட்டிகளைக் கிழித்த பாஜகவினரைக் கைது செய்தனர். சிங்காநல்லூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 14 பேர், சரவணம்பட்டி காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் 9 பேர் என 23 பேர் கைது செய்யப்பட்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆதிச்சநல்லூரில் கலாச்சார மையம்: கல்லூரி மாணவர்கள் ஆர்வம்
வெள்ளி 6, பிப்ரவரி 2026 8:02:05 PM (IST)

கோயில் குடமுழுக்கில் யாருக்கும் முதல் மரியாதை அளிக்கக் கூடாது : உயர் நீதிமன்றம் உத்தரவு!
வெள்ளி 6, பிப்ரவரி 2026 5:05:45 PM (IST)

தூத்துக்குடியில் பிளாஸ்டிக் ஒழிப்பிற்கு புதிய திட்டம்: மேயர் ஜெகன் பெரியசாமி அறிவிப்பு!
வெள்ளி 6, பிப்ரவரி 2026 4:53:16 PM (IST)

வடக்கு பச்சையாறு நீர்தேக்கத்திலிருந்து பிசான சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு!
வெள்ளி 6, பிப்ரவரி 2026 4:35:42 PM (IST)

சங்கரன்கோவிலில் முன்னாள் கவுன்சிலர் மகன் கொலை: உறவினர்கள் மறியல்!!
வெள்ளி 6, பிப்ரவரி 2026 12:05:02 PM (IST)

விஜய்க்கு வருமான வரித்துறை விதித்த ரூ. 1.50 கோடி அபராதம் செல்லும்: உயர் நீதிமன்றம் தீர்ப்பு
வெள்ளி 6, பிப்ரவரி 2026 10:57:36 AM (IST)

