» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நெல்லை மாநகராட்சியில் காலை உணவை குப்பையில் வீசிய தூய்மை பணியாளர்கள்
சனி 31, ஜனவரி 2026 8:36:34 AM (IST)
நெல்லை மாநகராட்சியில் தரமற்ற முறையில் காலை உணவை வழங்கியதாக புகார் தெரிவித்த தூய்மை பணியாளர்கள், அந்த உணவை குப்பையில் வீசினர்.
தமிழகத்தில் மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு வழங்குவதற்கு சமீபத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்படி நெல்லை மாநகராட்சியிலும் கடந்த 1 மாதமாக தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது.
4 மண்டலங்களிலும் 750 தூய்மை பணியாளர்களுக்கு காலை நேரத்தில் உப்புமா, இட்லி, பொங்கல் வழங்கப்படுகிறது. இந்த திட்டம் தொடங்கிய சில நாட்கள் மட்டும் உணவு தரம் நன்றாக இருந்தாதகவும், அதன் பிறகு வழங்கப்படும் உணவு சாப்பிட முடியாத நிலையில் இருந்து வருவதாகவும் தூய்மை பணியாளர்கள் புகார் தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று நெல்லை மாநகராட்சி தச்சநல்லூர் மண்டல பகுதியில் தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட காலை உணவு தரமற்றதாக இருந்ததாக கூறி, அதனை பணியாளர்கள் சாப்பிடாமல் குப்பை தொட்டியில் வீசினார்கள். இதே போல் சில நாட்களாக சாப்பிட முடியாமல் உணவை குப்பை தொட்டியில் போடுவதாக கூறினார்கள்.
இதுகுறித்து தூய்மை பணியாளர்கள் கூறுகையில், "சாம்பார் தண்ணீர் போல இருக்கிறது, உப்புமா மற்றும் பொங்கலில் தண்ணீர் அதிகமாக உள்ளது. ஒரு நாளைக்கு வழங்கப்படும் ரூ.540 ஊதியத்தை ரூ.800 வரை உயர்த்தி வழங்க வேண்டும். எங்களது பணியை நிரந்தரம் செய்ய வேண்டும். காலை உணவுக்காக ஒதுக்கப்படும் தொகையை தங்களின் சம்பளத்துடன் சேர்த்து வழங்கிட வேண்டும்" என்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்காமல் இருப்பது சர்வாதிகாரப் போக்கு: அண்ணாமலை தாக்கு..!
சனி 31, ஜனவரி 2026 12:11:48 PM (IST)

சட்டமன்ற தேர்தலில் நான் வெற்றி பெறப்போவது உறுதி: தவெக தலைவர் விஜய் பேட்டி!
சனி 31, ஜனவரி 2026 10:52:22 AM (IST)

முழுக்க முழுக்க சுயநலம், துரோகம்: பா.ஜ.க. கூட்டணிக்கு எந்தக் கொள்கையும் கிடையாது: முதல்வர் பேச்சு
வெள்ளி 30, ஜனவரி 2026 5:48:41 PM (IST)

புனித வெள்ளியன்று மதுக்கடைகளை மூட தீர்மானம் : சட்டமன்றத்தில் நிறைவேற்ற கோரிக்கை!
வெள்ளி 30, ஜனவரி 2026 5:06:09 PM (IST)

திமுக தேர்தல் அறிக்கையின் மீது மக்களுக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது: கனிமொழி எம்.பி பேட்டி!
வெள்ளி 30, ஜனவரி 2026 3:55:06 PM (IST)

தூத்துக்குடியில் தரமற்ற சாலையால் மாணவன் பலி? அதிமுக உறுப்பினர் புகார் - திமுக எதிர்ப்பு!
வெள்ளி 30, ஜனவரி 2026 3:27:15 PM (IST)

