» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

வரும் சட்டமன்ற தேர்தல் ஊழல் ஆட்சிக்கு முடிவு கட்டும் : எடப்பாடி பழனிசாமி பேச்சு

வெள்ளி 23, ஜனவரி 2026 4:56:50 PM (IST)

வரும் சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி வெல்லும், குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டும், ஊழல் ஆட்சிக்கு முடிவு கட்டும் என்று எடப்பாடி பழனிசாமி பேசினார்.

மதுராந்தகத்தில் நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது : மதுராந்தகத்தில் நடக்கும் என்டிஏ கூட்டணி கூட்டத்தில் பிரதமர் என்ன பேசப்போகிறார் என நாடே உற்றுநோக்கிக் கொண்டிருக்கிறது.

என்டிஏ கூட்டணி பொபதுக்கூட்டத்தில் பிரதமர் பங்கேற்பதால் இயற்கையே இன்று சூரியனை மறைத்துவிட்டது. நம்மை எதிர்ப்பவர்கள் தீயவர்களாக இருந்தாலும் உரியவர்களோடு ஒன்றிணைந்து செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.

திமுகவின் நான்கே முக்கால் ஆண்டு ஆட்சியில் மக்களுக்கு எஞ்சியது துன்பமும் வேதனையும் தான். ஒரு குடும்பம் வாழ 8 கோடி மக்களை சுரண்டுவது நியாயமா? இந்த ஆட்சி அகற்றப்பட வேண்டும். திமுகவின் நான்கே முக்கால் ஆண்டு ஆட்சியில் அவர்களின் ஒரே சாதனை ஊழல், ஊழல், ஊழல் மட்டும் தான்.

இந்த தேர்தல் தான் திமுகவிற்கு இறுதித்தேர்தல், தீயச்சக்தி திமுகவை நீக்குவோம், எம்ஜிஆர், அம்மா கண்ட கனவை நிறைவேற்றுவோம். குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டும் தேர்தல், ஊழல் ஆட்சிக்கு முடிவு கட்டும் தேர்தல். வரும் சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி வெல்லும். அதிமுக ஆட்சியில் மத்திய அரசிடம் இருந்து நிதி பெற்று பல திட்டங்களை செயல்படுத்தினோம். இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory