» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நாலுமாவடியில் மாவட்ட அளவிலான கபடி போட்டி: மளவராயநத்தம் அணி கோப்பையை கைப்பற்றியது
திங்கள் 19, ஜனவரி 2026 7:27:27 AM (IST)

நாலுமாவடியில் நடந்த மாவட்ட அளவிலான மின்னொளி கபடி போட்டியில் மளவராயநத்தம் அணி முதலிடத்தை பிடித்து ரெடீமர்ஸ் கோப்பையை கைப்பற்றியது.
தமிழர் திருநாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட கிராமப்புற கபடி வீரர்களை ஊக்குவிக்கும் விதமாக நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் விளையாட்டுத்துறை சார்பில் 9ம் ஆண்டு ரெடீமர்ஸ் கோப்பைக்கான மாவட்ட அளவிலான கிராமப்புற ஆண்கள் அணிகளுக்கான மின்னொளி கபடி போட்டி 2 நாட்கள் நடந்தது. நாலுமாவடி காமராஜ் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் ஜன.16ம் தேதி துவங்கிய இந்த போட்டியில் மணத்தி, குருகாட்ரூர், ராஜபதி, ஆழ்வார்திருநகரி, ராஜபதி, சிவகளை, கோட்டூர், நல்லூர், புதுக்குடி, கொங்கராயன்குறிச்சி, மளவராயநத்தம், மெஞ்ஞானபுரம் உள்ளிட்ட 20 கிராமங்களை சேர்ந்த அணிகள் கலந்து கொண்டு விளையாடின.
தொடர்ந்து நேற்று முன்தினம் நடந்த இறுதி போட்டியில் மளவராயநத்தம் அணியும், பக்கப்பட்டி அணியும் மோதியது. இதில் மளவராயநத்தம் அணி வெற்றி பெற்று முதலிடத்தையும், பக்கப்பட்டி அணி 2ம் இடத்தையும், காயல்பட்டிணம் அணி 3ம் இடத்தையும், கேம்பலாபாத் அணி 4ம் இடத்தை பிடித்தது. தொடர்ந்து நடந்த பரிசளிப்பு விழாவிற்கு இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் மோகன் சி லாசரஸ் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக காமராஜ் மேல்நிலைப்பள்ளி செயலர் நவநீதன், தமிழ்நாடு மகளிர் சிறு குறு தொழில் முனைவோர் சங்க தலைவர் கிருஷ்ணா ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். முதலிடம் பிடித்த அணிக்கு ரூ.50 ஆயிரம் ரொக்கப்பரிசும் ரெடீமர்ஸ் கோப்பையும், 2ம் இடம் பிடித்த அணிக்கு ரூ.30 ஆயிரம் ரொக்கப்பரிசும் கோப்பையும், 3 மற்றும் 4வது இடத்தை பிடித்த அணிகளுக்கு தலா ரூ.20 ஆயிரமும் பரிசாக வழங்கப்பட்டது. சிறந்த விளையாட்டு வீரர்களுக்கும் பரிசு வழங்கப்பட்டது.
போட்டியை காண வந்த பார்வையாளர்களுக்கு குலுக்கல் முறையில் எல்.இ.டி டிவி, தங்க நாணயம், பட்டு சேலை, பொங்கல் பானை, கிரைண்டர், மிக்ஸி, செல்போன் போன்றவை வழங்கப்பட்டது. நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளி இயற்பியல் ஆசிரியர் ஜெர்சோம் ஜெபராஜ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். ஏற்பாடுகளை நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவன பொதுமேலாளர் செல்வக்குமார் தலைமையில் போட்டி ஒருங்கிணைப்பாளர் அர்ஜூனா விருது பெற்ற கபடி வீரர் மணத்தி கணேசன், இயேசு விடுவிக்கிறார் சமூக சேவை ஒருங்கிணைப்பாளர் மணத்தி எட்வின், மக்கள் தொடர்பு அலுவலர் சாந்தகுமார் மற்றும் ஜெபக்குழுவினர் செய்திருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சொத்தை பிரித்து தராததால் பெற்ற தாயை கொன்று கிணற்றில் வீசிய மகன் கைது!
திங்கள் 19, ஜனவரி 2026 3:24:16 PM (IST)

அரசு ஊழியர்களின் எதிர்காலத்தையே நிர்மூலமாக்கிய அதிமுக நீலிக்கண்ணீர் : அன்பில் மகேஸ் சாடல்!
திங்கள் 19, ஜனவரி 2026 12:49:31 PM (IST)

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஜன.30 ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு
திங்கள் 19, ஜனவரி 2026 10:53:39 AM (IST)

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் 71 புதிய மாவட்ட தலைவர்கள் நியமனம்!
திங்கள் 19, ஜனவரி 2026 10:21:51 AM (IST)

நெல்லையப்பர் கோவிலில் லட்ச தீபத்திருவிழா கோலாகலம் : திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
திங்கள் 19, ஜனவரி 2026 8:26:27 AM (IST)

நான்கு வழிச்சாலையில் தீப்பிடித்து எரிந்த அரசு பஸ்: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்!
திங்கள் 19, ஜனவரி 2026 8:24:39 AM (IST)

