» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் போராட்டம் : அரசு டாக்டர்கள் கூட்டமைப்பு அறிவிப்பு!
ஞாயிறு 11, ஜனவரி 2026 10:41:15 AM (IST)
கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் காலவரையற்ற பணி புறக்கணிப்பு போராட்டம் நடத்த உள்ளதாக அரசு டாக்டர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
இதுகுறித்து அனைத்து அரசு டாக்டர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அனைத்து அரசு டாக்டர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளான அரசாணை 354 மறுவரையறை, ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்களுக்கான படிகள் ரூ.3 ஆயிரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அமைச்சரை நேரடியாக சந்தித்தபோது, இது தொடர்பாக நிதித்துறை அமைச்சருடன் வருகிற 19-ந்தேதி துறை உயர் அதிகாரிகள் அடங்கிய குழு பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று தெரிவித்திருக்கிறார்.
இந்த பேச்சுவார்த்தையில் உரிய தீர்வு எட்டப்படாத பட்சத்தில், அனைத்து அரசு டாக்டர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு கடந்த 2019-ம் ஆண்டு நடத்தியதைப் போல மீண்டும் ஒத்துழையாமை இயக்கம், 48 மணி நேர உண்ணாவிரத போராட்டம், சாகும் வரை உண்ணாவிரதம் இறுதியாக காலவரையற்ற பணி புறக்கணிப்பு என பல கட்ட போராட்டத்தை முன்னெடுப்பது என கூட்டமைப்பின் செயற்குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொடூர கொலை: பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்
புதன் 11, மார்ச் 2026 8:15:49 PM (IST)

தூத்துக்குடியில் மார்ச் 13ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் : ஆட்சியர் தகவல்
புதன் 11, மார்ச் 2026 5:41:12 PM (IST)

மண்டல தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு: ஆட்சியர் சுகுமார் தொடங்கி வைத்தார்
புதன் 11, மார்ச் 2026 4:56:24 PM (IST)

மதுரை சித்திரை திருவிழா: ஏப்.19ல் கொடியேற்றம்; மே 1ல் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம்!
புதன் 11, மார்ச் 2026 4:42:43 PM (IST)

திமுகவை வீழ்த்த அனைவரும் இணைய வேண்டும் : தவெக குறித்து கடம்பூர் ராஜூ கருத்து
புதன் 11, மார்ச் 2026 4:39:19 PM (IST)

தூத்துக்குடியில் கருப்புப் பையில் மனித மண்டையோடு : போலீஸ் விசாரணை
புதன் 11, மார்ச் 2026 3:23:59 PM (IST)

