» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ஜெ., மகள் என கூறிக்கொண்டு அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்த பெண் விரட்டியடிப்பு!
சனி 10, ஜனவரி 2026 5:41:14 PM (IST)
ஜெயலலிதாவின் மகள் என கூறிக்கொண்டு அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்த பெண்ணை அதிமுகவினர் வெளியேற்றினர்.
தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் தேர்தல் நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தி வருகின்றன. அந்த வகையில் அதிமுகவில் வேட்பாளர் நேர்காணல் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், தேர்தலில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்தவர்களிடம் அதிமுக தலைமை நேர்காணல் நடத்தி வருகிறது. ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலத்தில் இந்த நேர்காணல் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மகள் என கூறிக்கொண்டு இன்று அதிமுக அலுவலகத்திற்கு ஜெயலட்சுமி என்ற பெண் வருகை தந்தார். தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட விருப்பமனு அளித்துள்ளதாகவும், அதற்கான நேர்காணலுக்கு வந்ததாகவும் ஜெயலட்சுமி கூறினார். அப்போது, அதிமுக நிர்வாகிகளுக்கும் அப்பெண்ணுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, அந்த பெண்ணை தலைமை அலுவலகத்தில் இருந்து அதிமுகவினர் வெளியேற்றினர். இந்த சம்பவத்தால் அதிமுக தலைமை அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் தேர்தல் நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தி வருகின்றன. அந்த வகையில் அதிமுகவில் வேட்பாளர் நேர்காணல் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், தேர்தலில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்தவர்களிடம் அதிமுக தலைமை நேர்காணல் நடத்தி வருகிறது. ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலத்தில் இந்த நேர்காணல் நடைபெற்று வருகிறது.இந்நிலையில், மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மகள் என கூறிக்கொண்டு இன்று அதிமுக அலுவலகத்திற்கு ஜெயலட்சுமி என்ற பெண் வருகை தந்தார். தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட விருப்பமனு அளித்துள்ளதாகவும், அதற்கான நேர்காணலுக்கு வந்ததாகவும் ஜெயலட்சுமி கூறினார். அப்போது, அதிமுக நிர்வாகிகளுக்கும் அப்பெண்ணுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, அந்த பெண்ணை தலைமை அலுவலகத்தில் இருந்து அதிமுகவினர் வெளியேற்றினர். இந்த சம்பவத்தால் அதிமுக தலைமை அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அன்னை வேளாங்கண்ணி கெபி 44-வது ஆண்டு திருவிழா : தூத்துக்குடியில் கோலாகலத் தொடக்கம்!
சனி 29, ஆகஸ்ட் 2026 9:22:58 PM (IST)

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைத்தீர்க்கும் நாள் : நலதிட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்!
சனி 29, ஆகஸ்ட் 2026 5:43:26 PM (IST)

மூதாட்டியைக் கட்டிப்போட்டு 44 கிராம் நகை பறிப்பு : பக்கத்து வீட்டுப் பெண் உட்பட 2 பேர் கைது!
சனி 29, ஆகஸ்ட் 2026 5:14:03 PM (IST)

பெண்ணைக் கொன்று வேக வைத்த கொடூர தம்பதி கைது: விசாரணையில் பகீர் தகவல்கள்!
சனி 29, ஆகஸ்ட் 2026 4:39:35 PM (IST)

விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துக: தமிழக அரசுக்கு தேமுதிக வலியுறுத்தல்!
சனி 29, ஆகஸ்ட் 2026 10:50:02 AM (IST)

அஞ்சல்துறையில் 2,095 பணியிடங்கள்: பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
சனி 29, ஆகஸ்ட் 2026 10:34:39 AM (IST)



மக்கள்Jan 11, 2026 - 08:57:06 PM | Posted IP 162.1*****