» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தூத்துக்குடி–சென்னை கூடுதல் இரவு ரயில் இயக்க வேண்டும் : பாரதிய ஜனதா கோரிக்கை !!

சனி 10, ஜனவரி 2026 4:24:42 PM (IST)

தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு கூடுதல் இரவு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்க வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி சார்பில் தெற்கு ரயில்வே பொதுமேலாளருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து தெற்கு ரயில்வே பொதுமேலாளருக்கு பாஜக தெற்கு மாவட்ட தலைவர் ஆர். சித்ராங்கதன் அனுப்பியுள்ள கடிதத்தில் "தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு தற்போது 12693/12694 முத்துநகர்  எக்ஸ்பிரஸ் மட்டுமே இயக்கப்பட்டு வருவதாகவும், இதனால் முன்பதிவு பெட்டிகள் அனைத்தும் உடனடியாக நிரம்பி விடுவதால்  முன்பதிவு செய்து பயணிக்க முடியாமல் பயணிகள் கடும் சிரமத்தை எதிர்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ரத்து செய்யப்பட்ட தூத்துக்குடி–சென்னை லிங்க் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு மாற்றாகவும், அதிகரித்து வரும் பயணிகள் தேவையை கருத்தில் கொண்டும், 22623/22624 மதுரை–தாம்பரம் மகால் எக்ஸ்பிரஸ் ரயிலை தூத்துக்குடி வரை நீட்டித்து தினசரி இயக்கம் வழங்க வேண்டும்.

இந்த ரயில் தூத்துக்குடி வரை நீட்டிக்கப்பட்டால், சென்னைக்கு அதிகாலை நேரத்தில் சென்றடையவும், இரவு நேரத்தில் புறப்படவும் வசதி கிடைக்கும் என்றும், தஞ்சாவூர்–கும்பகோணம் வழியாக பிரதான ரயில் பாதைக்கு தினசரி இணைப்பு கிடைக்கும். எனவே, தூத்துக்குடி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை கருத்தில் கொண்டு, மகால் எக்ஸ்பிரஸ் ரயிலை தூத்துக்குடி வரை நீட்டித்து உடனடியாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து

SUNDARJan 10, 2026 - 08:51:30 PM | Posted IP 162.1*****

GOOD DEMAND

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory