» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தொழிலதிபரிடம் ரூ.70 லட்சம் மோசடி வழக்கில் ஹரி நாடார் கைது
சனி 10, ஜனவரி 2026 12:52:16 PM (IST)
தொழிலதிபரிடம் ரூ.70 லட்சம் மோசடி செய்த வழக்கில், திருநெல்வேலியைச் சேர்ந்த ஹரி நாடாரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கு, தனது தொழிலை விரிவுபடுத்துவதற்காக பணம் தேவைப்பட்டது. தனது நண்பர் மூலம் திருநெல்வேலியைச் சேர்ந்த பனங்காட்டு படை கட்சி ஒருங்கிணைப்பாளர் ஹரி நாடாரை அணுகினார். அப்போது, ரூ.35 கோடி கடன் பெற்றுத் தருவதாக உறுதியளித்த ஹரி நாடார், அதற்குப் பிரதிபலனாக ரூ.70 லட்சத்தை தொழிலதிபரிடம் பெற்றுக் கொண்டார்.ஆனால், கடன் பெற்றுத் தரவில்லை, வாங்கிய ரூ.70 லட்சத்தையும் அவர் திருப்பி தரவில்லை. இந்நிலையில், தொழிலதிபர் அளித்த புகாரின் அடிப்படையில், மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.இதில் ரூ.70 லட்சம் மோசடி செய்தது உறுதியான நிலையில், ஹரி நாடார், உடந்தையாக இருந்த சேலத்தை சேர்ந்த பாபு ஆகியோரை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொடூர கொலை: பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்
புதன் 11, மார்ச் 2026 8:15:49 PM (IST)

தூத்துக்குடியில் மார்ச் 13ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் : ஆட்சியர் தகவல்
புதன் 11, மார்ச் 2026 5:41:12 PM (IST)

மண்டல தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு: ஆட்சியர் சுகுமார் தொடங்கி வைத்தார்
புதன் 11, மார்ச் 2026 4:56:24 PM (IST)

மதுரை சித்திரை திருவிழா: ஏப்.19ல் கொடியேற்றம்; மே 1ல் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம்!
புதன் 11, மார்ச் 2026 4:42:43 PM (IST)

திமுகவை வீழ்த்த அனைவரும் இணைய வேண்டும் : தவெக குறித்து கடம்பூர் ராஜூ கருத்து
புதன் 11, மார்ச் 2026 4:39:19 PM (IST)

தூத்துக்குடியில் கருப்புப் பையில் மனித மண்டையோடு : போலீஸ் விசாரணை
புதன் 11, மார்ச் 2026 3:23:59 PM (IST)

