» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

200+ தொகுதிகளில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை!

சனி 10, ஜனவரி 2026 12:31:12 PM (IST)

சட்டமன்ற தேர்தலில் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

சென்னை கொளத்தூரில் நடைபெற்ற பொங்கல் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசியதாவது: தமிழர் திருநாளான பொங்கலை எழுச்சியுடன் கொண்டாடி வருகிறோம்.கொளத்தூர் தொகுதியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கும்போது எனர்ஜி வருகிறது.

தி.மு.க. ஆட்சியில் செய்த சாதனைகளை எடுத்துச் சொல்ல வேண்டிய அவசியமில்லை. தேர்தல் களத்தில் ஆற்ற வேண்டிய பணிகளில் 50 சதவீத பணிகள் மீதம் இருக்கிறது. தி.மு.க.வினரை போல் யாரும் வேலை செய்ய முடியாது என பா.ஜ.க.வினரே புகழ்கின்றனர். 200 தொகுதிகளையும் தாண்டி தி.மு.க. கூட்டணி வெற்றி பெறுவது உறுதி என்றார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory