» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தூத்துக்குடியில் 1.5 கோடி கஞ்சா ஆயில் பறிமுதல்: 3 நாட்களில் 4பேர் கைது!

வெள்ளி 9, ஜனவரி 2026 8:09:55 PM (IST)

தூத்துக்குடியில் கடந்த 3 நாட்களில் சுமார் 1 கோடியே 50 லட்சம் மதிப்புள்ள கஞ்சா ஆயில் வைத்திருந்த 4பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 

தூத்துக்குடியில் கடந்த 07ஆம் தேதி தாளமுத்துநகர் காவல் நிலைய ஆய்வாளர்  அருளப்பன் தலைமையிலான போலீசார் ரோந்து பணி மேற்கொண்ட போது தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா ஆயில் வைத்திருந்த 2 எதிரிகளை கைது செய்து அவர்களிடமிருந்து சுமார் 1 கோடி மதிப்புள்ள கஞ்சா ஆயிலை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து தாளமுத்துநகர் காவல் நிலைய ஆய்வாளர் வழக்குப்பதிவு செய்து உரிய சட்ட நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.

அதே போன்று நேற்று (08.01.2026) தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர்  திருமுருகன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா ஆயில் வைத்திருந்த 2 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து சுமார் 50 லட்சம் மதிப்புள்ள கஞ்சா ஆயிலை பறிமுதல் செய்தனர். 

இதுகுறித்து தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் வழக்குப்பதிவு செய்து உரிய சட்ட நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  நை. சிலம்பரசன்  உத்தரவின்படி தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டு கடந்த 3 நாட்களில் மொத்தம் 1 கோடியே 50 லட்சம் மதிப்புள்ள கஞ்சா ஆயிலை பறிமுதல் செய்து 4பேரை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

மேற்படி துரிதமாக செயல்பட்டு கஞ்சா ஆயில் வைத்திருந்தவர்களை கைது செய்தும், சொத்துக்களை பறிமுதல் செய்தும் சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெகுவாக பாராட்டினார். இதுபோன்று  கஞ்சா, புகையிலை போன்ற போதைப்பொருள் விற்பனை மற்றும் கடத்தல் ஆகியவற்றை முற்றிலும் தடுக்கும் பொருட்டு தமிழ்நாடு அரசு ‘DrugFreeTN” எனும் செயலியை உருவாக்கியுள்ளது. 

மேற்படி செயலியின் மூலம் பொதுமக்கள் கஞ்சா, புகையிலை போன்ற போதை பொருள் கடத்தல் மற்றும் விற்பனை குறித்த தகவல்களை அநாமதேய (anonymous) தயங்காமல் புகார் அளிக்கலாம். மேலும் புகார் அளிப்பவர்களின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என தூத்துக்குடி மாவட்ட காவல்துறை தெரிவித்துக்கொள்கிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் போதை பழக்கத்தை குறைக்கும் நோக்கத்தோடு, மாவட்ட காவல்துறையினர் கஞ்சா, குட்கா போன்ற போதை பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது தனி கவனம் செலுத்தி தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இதுபோன்ற போதை பொருள்களை விற்பனை செய்பவர்கள் மற்றும் வாங்குபவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  நை. சிலம்பரசன்  வலியுறுத்தியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory