» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ரவுடியின் மனைவி விஷம் குடித்து தற்கொலை : 2 மகள்களுக்கும் தீவிர சிகிச்சை!!
புதன் 17, டிசம்பர் 2025 11:54:59 AM (IST)
கடையம் அருகே 2 மகள்களுக்கு விஷம் கொடுத்துவிட்டு தானும் விஷம் குடித்த, ரவுடியின் மனைவி உயிரிழந்தார். 2 மகள்களுக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தென்காசி மாவட்டம் கடையம் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன் (35). இவரது மனைவி ஜாேஸ்பினாள் (32). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். பிரபல ரவுடியான பாலமுருகன் மீது கொலை, கொள்ளை, வழிப்பறி என தமிழ்நாடு மற்றும் கேரள போலீஸ் நிலையங்களில் 80-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
கடந்த மாதம் திருட்டு வழக்கு ஒன்றுக்காக போலீசார் பாலமுருகனை கைது செய்து விருதுநகர் கோர்ட்டில் ஆஜர்படுத்திவிட்டு மீண்டும் கேரள மாநிலம் திருச்சூர் சிறைக்கு வாகனத்தில் அழைத்து சென்றுகொண்டிருந்தனர். ஆனால், செல்லும் வழியில் பாலமுருகன் போலீசாரை தாக்கிவிட்டு தப்பிச் சென்றார்.
தென்காசி மாவட்டத்தில் அவர் பதுங்கியிருப்பதாக வந்த தகவலின் பேரில் அவரை பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டை நடத்தினர். கடையம் ராமநதி அணை அருகே உள்ள மலைக்குன்றின் மேல் அவர் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அதன்பேரில் போலீசார் அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆனால் அவரை பிடிக்க சென்ற போலீசார் மலையில் சிக்கிக்கொண்டனர்.
அவர்களை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர். எனினும் பாலமுருகன் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். இதற்கிடையே, பாலமுருகன் குறித்து ஜோஸ்பினாளிடம் போலீசார் விசாரித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அவர் தனது குழந்தைகளுடன் ஆலங்குளம் அருகே காவலாகுறிச்சியில் வசிக்கும் உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
தொடர்ந்து மன உளைச்சலில் இருந்த ஜோஸ்பினாள் கடந்த சில நாட்களுக்கு முன் உறவினர் வீட்டில் வைத்து 2 மகள்களுக்கும் விஷத்தை கொடுத்துவிட்டு தானும் குடித்தார். இதில் 3 பேரும் மயங்கினார்கள். தொடர்ந்து 3 பேரையும் உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ஜோஸ்பினாள் நேற்று முன்தினம் உயிரிழந்தார்.
2 மகள்களுக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரவுடியின் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

முன்புபோல் ஊழல் செய்ய முடியாது என்று கவலையா? - முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி
புதன் 17, டிசம்பர் 2025 5:42:27 PM (IST)

தென்காசி நீதிமன்றத்தில் ராக்கெட் ராஜா ஆஜர்: டிஎஸ்பி தலைமையில் போலீசார் குவிப்பு!
புதன் 17, டிசம்பர் 2025 5:32:20 PM (IST)

ஆட்சிமொழிச் சட்டவாரம் விழிப்புணர்வு பேரணி: மாவட்ட வருவாய் அலுவலர் தொடங்கி வைத்தார்
புதன் 17, டிசம்பர் 2025 4:46:23 PM (IST)

நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாமல் இருப்பது என்ன செயல்? நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கேள்வி
புதன் 17, டிசம்பர் 2025 4:35:36 PM (IST)

திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு: கனிமொழி எம்.பி தலைமையில் குழு நியமனம்!
புதன் 17, டிசம்பர் 2025 3:58:09 PM (IST)

அரசுப் பள்ளியில் சுவர் இடிந்து மாணவன் பலி : தலைமையாசிரியர் உட்பட 3 பேர் மீது வழக்கு!
புதன் 17, டிசம்பர் 2025 3:47:00 PM (IST)


.gif)