» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

துர்கா ஸ்டாலினை அநாகரிகமாக பேசியதாக பாஜக நிர்வாகி மீது திமுக வழக்கறிஞர் அணி புகார்!

வெள்ளி 7, நவம்பர் 2025 4:35:02 PM (IST)



தூத்துக்குடியில் முதல் அமைச்சரின் மனைவி துர்கா ஸ்டாலின் குறித்து அநாகரிகமாக பேசிய பாஜக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக வழக்கறிஞர் அணி ஏஎஸ்பியிடம் புகார் மனு அளித்துள்ளனர். 

தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலினை அநாகரிமான வார்த்தையால் பேசிய பாஜக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று திமுக வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் செல்வ லெட்சுமி, உதவி காவல்துறை கண்காணிப்பாளரை நேரில் சந்தித்து அளித்த புகார் மனு அளித்தனர்.

அந்த மனுவில், "கடந்த 3ம்தேதி கோவையில் நிகழ்ந்த துயர சம்பவமான மாணவியின் பாலியல் பலாத்காரத்தை கண்டித்து 6ம் தேதி தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகில் தெற்கு மாவட்ட பாஜக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மகளிர் அணியினர் முதலமைச்சர் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் குறித்து கொச்சையான மற்றும் அநாகரிகமான வார்த்தைகளை பேசினார்.

இது தொடர்பாக தெற்கு மாவட்ட மகளிர் அணி தலைவர் வெள்ளத்தாய், மற்றும் வடக்கு மாவட்ட அணி தலைவர் உமாசெல்வி, மற்றும் தெற்கு மாவட்ட பிஜேபி கட்சியின் தலைவர் சித்தாரங்கன் ஆகியோர் தூண்டுதலின் பேரில் பேசிய பிரச்சாரபிரிவு மாவட்ட செயலாளர் அனுசியா என்பவர் மீது குற்றவியல் சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். 

பின்னர் அவர்கள் கூறுகையில் தமிழக முதலமைச்சரின் மனைவி மீது பேசிய வார்த்தைகளை ஏற்றுக்கொள்ள முடியாது அரசியல் பேச்சுக்கு ஓரு எல்லை உண்டு விரைவில் இந்த செயலை கண்டித்து வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் ஆலோசனை படி போராட்டம் நடைபெறும் என்று கூறினர். 

இதில், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கவிதாதேவி மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் குபேர்இளம்பரிதி, மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் செல்வி, மாநகர திமுக துணை செயலாளர் பிரமிளா, மாநகர வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் ரூபராஜா, வக்கீல் கிறிஸ்டோபர் விஜயராஜா, தொண்டரணி துணை அமைப்பாளர் ஐயம்மாள், மாநகர வழக்கறிஞர் அணி துணைத்தலைவர் அமலாஜெஸிந்தா, வழக்கறிஞர் அமுதவல்லி அனிதா உள்பட பலர் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து

யாரு நீங்க எல்லாம்Nov 7, 2025 - 06:23:54 PM | Posted IP 162.1*****

நம்ம ஊரில் நிறைய பிரச்சனைகள் இருக்கு றோட்டுக்கள் சரியில்லை, சிமெண்ட் சாலைகள் சரியில்லை , சிமெண்ட் சாலைகளில் மண் தேங்கி இருக்கு, கஷ்டப்பட்ட மக்களுக்கு நிறைய பிரச்சினைகள் இருக்கு,... அதை கவனிங்க, ஆசியாவில் 3 ஆம் இடத்தில இருக்கும் பணக்கார குடும்பத்துக்கு சிறிய பிரச்னை வந்தால் பொங்குறாங்க. அடக் கடவுளே..

வேடிக்கை பார்ப்பவன்Nov 7, 2025 - 05:46:40 PM | Posted IP 104.2*****

வேஸ்ட்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory