» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தி.மு.க. உறுப்பினர் வைஷ்ணவி புகார் எதிரொலி : இன்ஸ்டாகிராம் பிரபலம் அதிரடி கைது

வெள்ளி 7, நவம்பர் 2025 11:13:33 AM (IST)

தவெகவை விமர்சித்ததால், தன்னை அவதூறாக சித்தரித்து வீடியோ வெளியிட்டதாக தி.மு.க. உறுப்பினர் வைஷ்ணவி அளித்த புகார் எதிரொலியாக இன்ஸ்டாகிராம் பிரபலம் கைது செய்யப்பட்டுள்ளார். 

கோவையைச் சேர்ந்த தி.மு.க. உறுப்பினர் வைஷ்ணவி(20). இவர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் நிர்வாகியாக இருந்த நிலையில், அக்கட்சியில் இருந்து விலகி தி.மு.க.வில் இணைந்தார். தொடர்ந்து சமூக வலைதளங்களில் த.வெ.க. குறித்தும், அக்கட்சியை சேர்ந்தவர்களின் செயல்பாடுகள் குறித்தும் வைஷ்ணவி கடுமையாக விமர்சித்து வருகிறார்.

இதற்கிடையில் கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் த.வெ.க. தலைவர் விஜய்யை சந்திப்பதற்காக மாமல்லபுரத்திற்கு சென்றதை குறிப்பிடும் வகையில் ஏ.ஐ. வீடியோ ஒன்றை வைஷ்ணவி பகிர்ந்திருந்தார். இதற்கு த.வெ.க. தொண்டர்கள் கடும் விமர்சனங்களை முன்வைத்தனர்.

இந்நிலையில், இன்ஸ்டாகிராம் பிரபலமான கார்த்திக் என்பவர், வைஷ்ணவியின் புகைப்படத்துடன் கூடிய சர்ச்சைக்குரிய வீடியோவை வெளியிட்டு இருந்தார். இது குறித்து வைஷ்ணவி அளித்த புகாரின் பேரில், கார்த்திக் மீது தகவல் தொழில்நுட்ப சட்டம், பெண்கள் வன்கொடுமை சட்டம், கொலை மிரட்டல் உள்பட ஆறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து சைபர் கிரைம் போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory