» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பழிவாங்க நினைத்திருந்தால் விஜய் சிறையில் இருந்திருப்பார்: சபாநாயகர் அப்பாவு பேட்டி

வியாழன் 6, நவம்பர் 2025 3:50:26 PM (IST)

பழிவாங்க வேண்டும் என்ற எண்ணம் அரசுக்கு இருந்திருந்தால் விஜய்யை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டிருப்பார் என அப்பாவு கூறியுள்ளார்.

நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் அப்பாவு கூறியதாவது: கரூர் விவகாரத்தில் முதல்-அமைச்சரை சிறுமைப்படுத்த நினைப்பவர்கள் சிறுமைப்பட்டு போவார்கள். பழிவாங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்திருந்தால் விஜய்யை கைது செய்து சிறையில் அடைத்திருப்பார். 

கரூர் நெரிசலில் 41 பேர் இறந்தபோது துண்டை காணோம், துணியை காணோம் என ஓடினர். எந்த தலைவரும் தன் தொண்டன் இறக்க வேண்டும் என எண்ண மாட்டார் என பேசியவர் முதல்-அமைச்சர். முதல்-அமைச்சரின் பெருந்தன்மையை சாதாரண மக்கள் பாராட்டி கொண்டிருக்கின்றனர் என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory