» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தற்காலிக மின் இணைப்பு வழங்க லஞ்சம் வாங்கிய 2 மின்வாரிய அதிகாரிகளுக்கு சிறை தண்டனை
வியாழன் 30, அக்டோபர் 2025 8:17:13 AM (IST)
வீடு கட்டுவதற்கு தற்காலிக மின் இணைப்பு வழங்க லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரிகள் 2 பேருக்கு சிறை தண்டனை விதித்து நெல்லை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
நெல்லை ரெட்டியார்பட்டி ஸ்பென்சர் காலனியை சேர்ந்தவர் குத்தால விசேஷ். இவருக்கு சொந்தமாக பாளையங்கோட்டை தாலுகா டக்கரம்மாள்புரம் அருகே 10 சென்ட் இடம் உள்ளது. அந்த இடத்தில் புதிதாக வீடு கட்டுவதற்காக தற்காலிக மின் இணைப்பு வழங்கக்கோரி பெருமாள்புரத்தில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் தனது தந்தை மூலம் விண்ணப்பிக்க வந்தார்.
அப்போது அங்கு பணியில் இருந்த மின்வாரிய உதவி செயற்பொறியாளர் சிவக்குமார் மற்றும் வணிக உதவியாளர் உதயகுமார் ஆகியோர் தற்காலிக மின் இணைப்பு வழங்க ரூ.7,500 லஞ்சமாக கேட்டுள்ளனர். இதுகுறித்து குத்தால விசேஷ், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
தொடர்ந்து அவர்களின் அறிவுரையின்பேரில் குத்தால விசேஷ் கடந்த 30.9.2009 அன்று மின்வாரிய அலுவலகத்துக்கு சென்று ரசாயனம் தடவிய பணம் கொடுத்தபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கையும் களவுமாக 2 மின்வாரிய அதிகாரிகளையும் கைது செய்தனர்.
இவர்கள் மீதான வழக்கு நெல்லையில் ஊழல் வழக்குகளை விசாரணை செய்யும் சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது. நேற்று இந்த வழக்கில் நீதிபதி சுப்பையா தீர்ப்பளித்தார். குற்றம்சாட்டப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் சிவக்குமார், உதயகுமார் ஆகிய 2 பேரும் குற்றவாளிகள் என உறுதி செய்யப்பட்டுள்ளதால், அவர்களுக்கு தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குரூப்-1, குரூப்-2 உள்ளிட்ட வருடாந்திர தேர்வு அட்டவணை விரைவில் வெளியீடு: டிஎன்பிஎஸ்சி
வியாழன் 6, நவம்பர் 2025 12:17:30 PM (IST)

விஜய் நிதானம் இழக்காமல் அரசியல் நாகரிகத்தை கடைபிடிக்க வேண்டும்: வைகோ அறிக்கை!
வியாழன் 6, நவம்பர் 2025 12:06:44 PM (IST)

பீகாரில் முதல்கட்டத் தோ்தல் தொடங்கியது : 121 தொகுதிகளில் விறுவிறு வாக்குப்பதிவு!
வியாழன் 6, நவம்பர் 2025 10:34:53 AM (IST)

சென்னையில் ரூ.2 ¼ லட்சத்துக்கு பெண் குழந்தை விற்பனை: பெற்றோர் உள்பட 6 பேர் கைது
வியாழன் 6, நவம்பர் 2025 10:24:54 AM (IST)

தமிழகத்தில் 218 விஏஓக்கள் நேரடி நியமனத்துக்கு இடைக்கால தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு
புதன் 5, நவம்பர் 2025 5:21:10 PM (IST)

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!
புதன் 5, நவம்பர் 2025 4:08:28 PM (IST)


.gif)