» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஆசிய விளையாட்டு போட்டியில் 2 வெள்ளி பதக்கம் : கோவில்பட்டி வீரருக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு!

புதன் 29, அக்டோபர் 2025 11:06:50 AM (IST)



பஹ்ரைன்‌ நாட்டில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டியில் 2 வெள்ளி பதக்கம் வென்ற கோவில்பட்டி வீரருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்தார். 

பஹ்ரைன்‌ நாட்டில் நடைபெற்று வரும் 3வது‌ இளையோர் ஆசிய விளையாட்டு போட்டியில்  தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சங்கரலிங்கபுரத்தை சேர்ந்த மகாராஜன் பளூதூக்கும் போட்டியில் Snatch பிரிவில் இரண்டாம் இடம் வெள்ளி பதக்கமும் Clean &Jerk பிரிவில் இரண்டாம் இடம் வெள்ளி பதக்கமும் வென்றுள்ளார். பதக்கம் வென்றுள்ள மகாராஜனுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்

கடம்பூர் செ.ராஜூ வாழ்த்து

முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ எம்எல்ஏ வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "பஹ்ரைன் நாட்டில் நடைபெற்று வரும் 3வது இளையோர் ஆசிய விளையாட்டு போட்டியில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சங்கரலிங்கபுரத்தை சேர்ந்த மகாராஜன் பளூதூக்கும் போட்டியில் Snatch பிரிவில் இரண்டாம் இடம் வெள்ளி பதக்கம் Clean &Jerk பிரிவில் இரண்டாம் இடம் வெள்ளி பதக்கமும் வென்றுள்ளார். அவருக்கு என்னுடைய வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory