» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
உரிமம் இன்றி பட்டாசு விற்பனை செய்தால் சட்டப்படி நடவடிக்கை : தூத்துக்குடி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை!
வியாழன் 16, அக்டோபர் 2025 5:45:42 PM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உரிமம் இன்றி பட்டாசு விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக காவல்துறை அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தீபாவளி பண்டிகை வர உள்ள நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் உரிமம் இன்றி சட்டவிரோதமாக பட்டாசு விற்பனையில் ஈடுபடுபவர்கள் மற்றும் சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபடுபவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்களுக்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உத்தரவிட்டார்.
அவரது உத்தரவின் படி காவல் துணை கண்காணிப்பாளர்கள் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர்கள் தலைமையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் 34 பேர் கைது
அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் பொது இடத்தில் மது அருந்தி பொதுஅமைதிக்கு பங்கம் விளைவித்தல் மற்றும் சட்ட விரோத மதுபான விற்பனையில் ஈடுபட்டதாக தூத்துக்குடி நகர உட்கோட்டத்தில் 6 வழக்குகளும், ஊரக உட்கோட்டத்தில் 3 வழக்குகளும், திருச்செந்தூர் உட்கோட்டத்தில் 6 வழக்குகளும், ஸ்ரீவைகுண்டம் உட்கோட்டத்தில் ஒரு வழக்கும், விளாத்திகுளம் உட்கோட்டத்தில் 5 வழக்குகளும், சாத்தான்குளம் உட்கோட்டத்தில் 13 வழக்குகளும் என மொத்தம் 34 வழக்குகள் பதிவு செய்து 34 பேர் கைது செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று ஏரல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நேற்று (15.10.2025) சட்டவிரோதமாக உரிமம் இன்றி பட்டாசு வைத்திருந்த நபரை கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டதும் குறிப்பிடத்தக்கது. எனவே தூத்துக்குடி மாவட்டத்தில் காவல்துறையினர் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு சட்டவிரோத பட்டாசு விற்பனை மற்றும் மதுபான விற்பனையில் ஈடுபடுவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல்துறை தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பாளையங்கோட்டை சிறையில் போக்சோ கைதி தற்கொலை விவகாரம்: டி.ஐ.ஜி. விசாரணை
வியாழன் 16, அக்டோபர் 2025 7:52:58 PM (IST)

தி.மு.க.வுக்கு தாளம் போடுவர்களுக்கு மட்டுமே அங்கீகாரம்: சபாநாயகருக்கு அன்புமணி கண்டனம்
வியாழன் 16, அக்டோபர் 2025 5:01:13 PM (IST)

கச்சத்தீவு மீட்பு குறித்து இலங்கை பிரதமரிடம் பேச வேண்டும்: பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் கடிதம்!
வியாழன் 16, அக்டோபர் 2025 4:47:15 PM (IST)

வாட்ஸ்அப் ஹேக்கிங் மோசடி குறித்து மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் : காவல்துறை எச்சரிக்கை!
வியாழன் 16, அக்டோபர் 2025 4:09:26 PM (IST)

கனிமொழி எம்.பி.யின் தாயார் ராசாத்தி அம்மாள் மருத்துவமனையில் அனுமதி!
வியாழன் 16, அக்டோபர் 2025 3:57:52 PM (IST)

கிட்னிகள் ஜாக்கிரதை பேட்ஜ் அணிந்து வந்த அதிமுக எம்எல்ஏக்கள்: சட்டப்பேரவையில் பரபரப்பு !
வியாழன் 16, அக்டோபர் 2025 12:21:15 PM (IST)
