» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கொலை வழக்கில் தந்தை - மகனுக்கு ஆயுள் தண்டனை : தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு
செவ்வாய் 14, அக்டோபர் 2025 8:00:18 PM (IST)
மாசார்பட்டி பகுதியில் நடந்த கொலை வழக்கில் தந்தை - மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
தூத்துக்குடி மாவட்டம் தாப்பாத்தி பகுதியைச் சேர்ந்த சப்பானிமுத்து மகன் முத்து முனியசாமி (55/2013) என்பவரை கடந்த 14.11.2013 அன்று தாப்பாத்தி பகுதியைச் சேர்ந்த கரும்பன் மகன் சுப்பையா (60/25), சுப்பையாவின் மகன்கள் மாரிமுத்து (36/25), ராஜ்குமார் (34/25), மகள் அந்தோணியம்மாள் (37/25), மனைவி மாரியம்மாள் (59/25) மற்றும் உறவினர் போலம்மாள் (77/25) ஆகியோர் சேர்ந்து முன்விரோதம் காரணமாக கம்பி மற்றும் அரிவாளால் தாக்கியும் அதை தடுக்க வந்த முத்துமுனியசாமியின் மகன் சேர்மக்கனி (36/25) என்பவரையும் தாக்கியனர். இதில் முத்துமுனியசாமி மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுகுறித்து மசார்பட்டி காவல் நிலைய போலீசார் கொலை மற்றும் கொலை முயற்சி உட்பட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து மேற்படி 6பேரையும் கைது செய்தனர். இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை நீதிபதி தாண்டவன் இன்று (14.10.2025) சுப்பையா மற்றும் ராஜ்குமார் ஆகிய இருவருக்கும் தலா ஆயுள்தண்டனை மற்றும் தலா ரூபாய் 10,000/- அபராதம் விதித்தும் மற்ற 4 எதிரிகளை விடுதலை செய்தும் உத்தரவிட்டு தீர்ப்பு வழங்கினார்.
இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய மாசார்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் சண்முகம் மற்றும் குற்றவாளிக்கு தண்டனை பெற்று தர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் ஆனந்த் கேப்ரியல் ராஜ் அவர்களையும், விசாரணைக்கு உதவியாக இருந்த தலைமை காவலர் மாரிச்சாமி ஆகியோரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பாராட்டினார். இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 20 கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட எதிரிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கொடுமுடியாறு அணையில் நவ.10ம் முதல் தண்ணீர் திறப்பு : தமிழக அரசு ஆணை!
வெள்ளி 7, நவம்பர் 2025 5:53:55 PM (IST)

புதிய வாகனம் தராமல் ஏமாற்றிய எலக்ட்ரிக் பைக் நிறுவனம் நுகர்வோருக்கு ரூ.63,000 வழங்க உத்தரவு!
வெள்ளி 7, நவம்பர் 2025 5:35:49 PM (IST)

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகரிப்பு: குஷ்பு குற்றச்சாட்டு!
வெள்ளி 7, நவம்பர் 2025 5:02:56 PM (IST)

துர்கா ஸ்டாலினை அநாகரிகமாக பேசியதாக பாஜக நிர்வாகி மீது திமுக வழக்கறிஞர் அணி புகார்!
வெள்ளி 7, நவம்பர் 2025 4:35:02 PM (IST)

எஸ்.ஐ.ஆர் என்பது ஜனநாயக படுகொலை : தூத்துக்குடியில் கனிமொழி எம்.பி. பேட்டி
வெள்ளி 7, நவம்பர் 2025 4:15:30 PM (IST)

மூதாட்டிகள் இருவரை கொன்று நகை கொள்ளை : கொலையாளியை சுட்டுப் பிடித்த போலீஸ்!
வெள்ளி 7, நவம்பர் 2025 12:40:16 PM (IST)


.gif)