» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
காவல்துறை உயர் அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் போட்டி : நெல்லை சரக டிஐஜி முதலிடம்!
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 8:10:00 PM (IST)

வல்லநாடு துப்பாக்கி சுடுதளத்தில் நடைபெற்ற காவல்துறை உயர் அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் போட்டியில் திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் (பொறுப்பு) சந்தோஷ் ஹடிமணி முதலிடம் பிடித்தார்.
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு துப்பாக்கி சுடுதளத்தில் நேற்று (15.09.2025) மற்றும் இன்று (16.09.2025) ஆகிய இரண்டு நாட்கள் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும்போட்டி தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் முன்னிலையில் திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் பொறுப்பு சந்தோஷ் ஹடிமணி தலைமையில் நடைபெற்றது.
இப்போட்டியில் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டம் மற்றும் திருநெல்வேலி நகரம், தமிழ்நாடு சிறப்பு காவல் படை 9,11, மற்றும் 12வது பட்டாலியனைச் சேர்ந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள்/காவல் ஆணையர் உட்பட காவல் உதவி ஆணையர், துணை ஆணையர், காவல் உதவி கண்காணிப்பாளர், காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள், காவல் துணை கண்காணிப்பாளர்கள் என மொத்தம் 26 காவல்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதில் பிஸ்டல்(Pistol) அல்லது ரிவால்வர் (Revolver) ரக துப்பாக்கி மற்றும் இன்சாஸ்(Insas) ரக துப்பாக்கி சுடும் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் பிஸ்டல்(Pistol) அல்லது ரிவால்வர் (Revolver) ரக துப்பாக்கி சுடும் பிரிவில் திருநெல்வேலி மாவட்ட சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் முருகன் முதலிடத்தையும், திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் பொறுப்பு சந்தோஷ் ஹடிமணி 2வது இடத்தையும், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் 3வது இடத்தையும் பிடித்து வெற்றி பெற்றனர்.
அதே போன்று இன்சாஸ் (Insas) ரக துப்பாக்கி சுடும் பிரிவில் திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் பொறுப்பு சந்தோஷ் ஹடிமணி மற்றும் கன்னியாகுமாரி மாவட்டம் குளச்சல் உட்கோட்ட காவல் உதவ கண்காணிபபாளர் ரேகா நங்லாட் ஆகிய இருவரும் முதலிடத்தையும், திருநெல்வேலி மாநகர பாளையங்கோட்டை காவல் உதவி ஆணையர் சுரேஷ் மற்றும் கன்னியாகுமாரி பயிற்சி காவல் துணை கண்காணிப்பாளர் இளஞ்செழியன் ஆகிய இருவரும் 2வது இடத்தையும், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் 3வது இடத்தையும் பிடித்து வெற்றி பெற்றனர்.
ஒட்டுமொத்த துப்பாக்கி சுடும் போட்டியில் திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் பொறுப்பு சந்தோஷ் ஹடிமணி முதலிடத்தையும், திருநெல்வேலி மாவட்ட சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் முருகன் 2வது இடத்தையும், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் 3வது இடத்தையும் பிடித்து வெற்றி பெற்றுள்ளனர்.
வெற்றி பெற்றவர்களுக்கு திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் பொறுப்பு சந்தோஷ் ஹடிமணி பரிசு வழங்கி பாராட்டினார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மேற்பார்வையில் ஆயுதப்படை காவல் ஆய்வாளர் சுனைமுருகன் உள்ளிட்ட காவல்துறையினர் செய்திருந்தனர். இந்நிகழ்வின்போது கமாண்டோ படை பிரிவின் காவல்துறை கூடுதல் கண்காணிக்காளர் ஸ்டீபன் ஆகியோர் உடனிருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயிலில் கூடுதலாக 4 பெட்டிகள் இணைப்பு
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 5:10:26 PM (IST)

முத்தூர் ஊராட்சியில் புதிய தொழில் பேட்டை : முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 3:25:13 PM (IST)

சென்னையில் விடிய, விடிய கொட்டித் தீர்த்த கனமழை: விமானங்கள் தாமதம்!
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 12:40:09 PM (IST)

தன்மானம்தான் முக்கியம் என்றால் டெல்லி சென்றது ஏன்? இபிஎஸ்-க்கு டிடிவி தினகரன் கேள்வி!
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 12:12:21 PM (IST)

ம.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யா தலைமையில் புதிய கட்சி உதயம்: கொடி அறிமுகம்
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 11:17:34 AM (IST)

அதிமுகவுக்கு துரோகம் செய்தவர்கள் நடு ரோட்டில் நிற்பார்கள்: இபிஎஸ் ஆவேசம்
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 11:08:29 AM (IST)
