» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பள்ளி வேன் மீது ரயில் மோதி கோர விபத்து: மாணவர்கள் 2 பேர் பலி!
செவ்வாய் 8, ஜூலை 2025 10:32:48 AM (IST)

கடலூர் அருகே பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்தில் மாணவர், மாணவி என இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்..
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே ரயில்வே கேட்டைக் கடக்க முயன்ற பள்ளி வேன் மீது சிதம்பரம் நோக்கிச் சென்ற ரயில் மோதியுள்ளது. தகவலறிந்து, அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிச் சென்று காயமடைந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். காவல் துறையினருக்கும், ஆம்புலன்ஸுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த வாகன ஓட்டுநர், பள்ளிக் குழந்தைகள் கடலூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ரயில் மோதியதில் பள்ளி வேன் 50 மீட்டர் தொலைவுக்கு தூக்கி வீசப்பட்டு உருக்குலைந்ததில் இருவர் பலியாகினர். அவர்களில் சின்ன காட்டு சாகை சுப்பிரமணியபுரம் கிராமத்தைச் சேர்ந்த திராவிட மணி மகள் சாருமதி (16), மாணவர் விமலேஷ்(10) ஆகியோர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
ஓட்டுநர் சங்கர்(47), தொண்டமாநத்தம் பகுதியைச் சேர்ந்த விஷ்வேஸ் (16), நிவாஸ்(13), சுப்பரமணியபுரத்தைச் சேர்ந்த மாணவர் செழியன்(15) அவசரச் சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர். விபத்தை பார்க்க வந்த அண்ணாதுரை (55) சிகிச்சை பெற்று வருகிறார்.
கேட் கீப்பர் அலட்சியத்தால்....
கேட் கீப்பரின் கவனக் குறைவால் ரயில்வே கேட் மூடப்படாததே விபத்துக்குக் காரணம் என்றும் முதல்கட்டத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை தொடர்ந்து, ரயில்வே கேட் கீப்பர் மீது பொதுமக்கள் தாக்குதல் நடத்தினர். தீவிர விசாரணைக்கு பின்னரே விபத்துக்கான காரணம் பற்றி தெரிய வரும்.
தனியார் பள்ளி வேன் மீது ரயில் மோதியதில் கடலூர் - மயிலாடுதுறை வழியே ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை, தஞ்சை, விழுப்புரம், சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்ல வேண்டிய ரயில் போக்குவரத்தும் பாதிப்படைந்து உள்ளது. பள்ளிக்குச் சென்ற மாணவர்கள் வேன் மீது 2 பேர் பலியான சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் உயிரிழப்பு 3 ஆக உயர்வு!
செவ்வாய் 8, ஜூலை 2025 12:43:26 PM (IST)

இத்தனை விபத்துகள் நேர்ந்த பின்னும், மத்திய அரசுக்கு துளியளவும் கவலை இல்லை: கனிமொழி எம்பி
செவ்வாய் 8, ஜூலை 2025 12:37:58 PM (IST)

நாடு முழுவதும் நாளை பொது வேலைநிறுத்தம்: தமிழ்நாட்டில் பஸ்-ஆட்டோக்கள் ஓடாது...?
செவ்வாய் 8, ஜூலை 2025 12:26:11 PM (IST)

நெல்லையப்பர் கோயில் ஆனித்திருவிழா தேரோட்டம்: திருநெல்வேலியில் கோலாகலம்
செவ்வாய் 8, ஜூலை 2025 11:39:30 AM (IST)

பள்ளி வேன் மீது ரயில் மோதி 2 மாணவர்கள் பலி: முதல்வர் இரங்கல் - ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!
செவ்வாய் 8, ஜூலை 2025 10:47:13 AM (IST)

ரயில் விபத்தில் 2 மாணவர்கள் பலி: எடப்பாடி பழனிசாமி இரங்கல்
செவ்வாய் 8, ஜூலை 2025 10:40:28 AM (IST)
