» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நிலுவை கடன்களை வசூலிக்க முடியாமல் வீட்டு வசதி சங்கங்கள் திண்டாட்டம்: ஊழியர்கள் தவிப்பு!

செவ்வாய் 8, ஜூலை 2025 10:22:55 AM (IST)

அபராத தொகை மீண்டும் தள்ளுபடியாகும் என்ற எதிர்பார்ப்பில் பலர் கடன் பாக்கியை திரும்ப செலுத்தாமல் இருப்பதால், வீட்டுவசதி சங்கங்களில் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

தமிழக மக்களுக்கு, நியாயமான "விலையில் வீட்டு மனைகள் கிடைக்கவும், குறைந்த வட்டியில் வீட்டுக்கடன் கிடைக்கவும், நகர்ப்புற வீட்டுவசதி சங்க சங்கங்கள் துவக்கப்பட்டன. தற்போது, 680 கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்கள் உள்ளன. இவை கடன் வழங்கவும், புதிய திட்டங்களை செயல்படுத்தவும், அவற்றை ஒருங்கிணைக்கவும் கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களின் இணையம் உள்ளது. 

வீட்டுவசதி சங்கங்களில் நிலுவையில் உள்ள கடன் தொகையை வசூலிக்க, அபராத வட்டி தள்ளுபடி திட்டம், சில ஆண்டுகளுக்கு முன் அறிவிக்கப்பட்டது. நிலுவைத்தொகை செலுத்திய 5,300 பேர், இன்னும் பத்திரம் திரும்ப கிடைக்காமல் காத்திருக்கின்றனர். இந்நிலையில், தற்போது நிலுவையில் உள்ள, 1,000 கோடி ரூபாய் கடனை வசூலிக்கும் பணியை முடுக்கி விட, சங்கங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால், அபராத வட்டிதள்ளுபடி சலுகை வழங்குவது குறித்து, அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை. 

இதனால், அபராத வட்டியுடன், கடன் நிலுவையை வசூலிக்க வேண்டிய நெருக்கடி, ஊழியர்களுக்கு ஏற்பட்டு உள்ளது. இதுகுறித்து, கூட்டு றவு வீட்டுவசதி சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது: கூட்டுறவு வீட்டுவசதி இணையத்தில், வீட்டு வசதி சங்கங்கள் பெயரில் உள்ள நிலுவைத் தொகை, மத்திய கால கடனாக டனாக மாற்றப்பட உள்ளது. அதேநேரம் உறுப்பினர்கள் பெயரில் உள்ள நிலுவைத் தொகையை வசூலிப்பதற்கான பணிகள் முடங்கி உள்ளன.

ஏற்கனவே பணம் செலுத்தியவர்களுக்கு, இன்னும் பத்திரம் கிடைக்காத நிலையில், நிலுவை கடனை, அபராத வட்டியுடன் திரும்ப செலுத்த யாரும் தயாராக இல்லை. இதனால், சங்கங்கள் கடனை வசூலிக்க முடியாமல், புதிய கடன்களை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது, சங்கங்கள் பெயரில் உள்ள நிலுவைத் தொகையை, மத்திய கால கடனாக மாற்றுவதிலும் பிரச்னையை ஏற்படுத்தி உள்ளது.

வீட்டு வசதித்துறை அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகள், வீட்டுவசதி வாரியம், நகர், ஊரமைப்பு துறையான டி.டி.சி.பி., நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாழ்விட வாரிய திட்டங்கள் தொடர்பாக மட்டும் கவனம் செலுத்துகின்றனர். வீட்டுவசதி சங்கங்கள் தொடர்பான பிரச்னைகளை கண்டு கொள்வதில்லை. இதற்கென தனியாக நேரம் ஒதுக்க, அமைச்சர்' மற்றும் அதிகாரிகள் தயாராக இல்லை.

இதனால்,நிலுவை கடன்களை வசூலிக்க முடியாமல், வீட்டுவசதி சங்கங்களும், பத்திரம் கிடைக்காமல் உறுப்பினர்களுள் பரிதவிக்கின்றனர். இதன் பிறகாவது இந்த விஷயத்தில் அமைச்சர் மற்றும் அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர்கூறினார். மேலும் தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக தள்ளுபடி குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று கடன் வாங்கிய பலர் எதிர்பார்ப்பில் உள்ளனர். இதனால் சங்கங்களில் ஊழியர்களுக்கு சம்பளம் கூட கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory