» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அஜித்குமார் கொலை சம்பவத்தைக் கண்டித்து த.வெ.க. போராட்டம் : காவல்துறை அனுமதி!

திங்கள் 7, ஜூலை 2025 5:38:08 PM (IST)

உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து திருப்புவனம் அஜித்குமார் கொலை சம்பவத்தை கண்டித்து த.வெ.க. நடத்தும் போராட்டத்துக்கு காவல்துறை அனுமதி வழங்கி உள்ளது.

மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் போலீஸ் விசாரணையில் இறந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. அ.தி.மு.க., பா.ஜ., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. த.வெ.க. தலைவர் நடிகர் விஜயும் கண்டனம் தெரிவித்து உயிரிழந்த அஜித்குமார் வீட்டுக்கு சென்று ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கினார். மேலும், அவரின் மரணத்துக்கு நீதி கேட்டு, சென்னையில் ஜூலை 3ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் அறிவித்து இருந்தார்.

போராட்டத்துக்கு போலீஸ் தரப்பில் இருந்து அனுமதி கிடைக்கவில்லை. இதையடுத்து, ஜூலை 6ம் தேதி போராட்டம் நடத்த அனுமதி கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் த.வெ.க., தரப்பு முறையிட்டது. ஆனால் அனுமதி கிடைப்பதில் தாமதம் நிலவியதால், போராட்டம் மீண்டும் தள்ளிப்போனது.

இந் நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் த.வெ.க., தொடர்ந்த வழக்கில் போராட்டம் நடத்த அனுமதி அளிக்கப்பட்டது. உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து,தற்போது காவல்துறையும் போராட்டம் நடத்த உரிய அனுமதியை வழங்கி உள்ளது. ஆனால் சென்னை எழும்பூர் ராஜ ரத்தினம் மைதானம் அருகே நடத்தாமல் சிவானந்தா சாலையில் போராட்டத்தை நடத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory