» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் ரூ.18.66 இலட்சம் நலதிட்ட உதவிகள்: ஆட்சியர் வழங்கினார்!
திங்கள் 7, ஜூலை 2025 5:04:07 PM (IST)

திருநெல்வேலி மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் மரு. இரா.சுகுமார், 220 பயனாளிகளுக்கு ரூ.18.66 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இக்கூட்டத்தில், பொதுமக்களின் கோரிக்கையின் தன்மைக்கேற்ப மனுக்கள் பதிவு செய்யப்பட்டதோடு, அம்மனுக்களை சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் அளிக்கும் வகையிலும், முக்கிய கோரிக்கைகள் மற்றும் பொது பிரச்சனைகள் தொடர்பான மனுக்களை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் அளிப்பதற்கான வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. இம்மனுக்களை சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து மனுக்களை பரிசீலனை செய்ய உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவிட்டார்கள். மேலும் முதலமைச்சரின் தனிப்பிரிவுகள் மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, மானூர் வட்டம், பிராஞ்சேரி கிராமம், இத்திகுளம் பகுதியை சார்ந்த சகாயமேரி நீரில் மூழ்கி இறந்தமைக்காக அன்னாரது குடும்பத்தினருக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.1 இலட்சத்திற்கான காசோலையினையும், மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை மானியத்தின் கீழ் ரூ.18,480/- பட்டப்பிற்கான கல்வி உதவித்தொகை ஒரு மாணவனுக்கும், தொழிலாளர் நலத்துறை (ச.பா.தி) சார்பில் ரூ.5.29 இலட்சம் மதிப்பில் 150 பயனாளிகளுக்கு கல்வி உதவித்தொகையும்,
ரூ.4 இலட்சம் மதிப்பில் 20 பயனாளிகளுக்கு திருமண உதவித்தொகையும், ரூ.1.85 இலட்சம் மதிப்பில் 4 பயனாளிகளுக்கு இயற்கை மரண உதவித்தொகையும், ரூ.4.10 இலட்சம் மதிப்பில் 2 பயனாளிகளுக்கு விபத்து மரண உதவித்தொகையும், ரூ.68,400/- மதிப்பில் 40 பயனாளிகளுக்கு புதிய ஓய்வூதிய உதவித்தொகையும், ரூ.11 ஆயிரம் மதிப்பில் ஒரு பயனாளிக்கு குடும்ப ஓய்வூதிய உதவித்தொகையும், ரூ.1.44 இலட்சம் மதிப்பில் ஒரு பயனாளிக்கு வீட்டு வசதி திட்டம் என மொத்தம் 220 பயனாளிகளுக்கு ரூ.18.66 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார்.
இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் மா.சுகன்யா, தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) ஜெயா, தனித்துணை ஆட்சியர் (நதிநீர் இணைப்பு) சண்முகசுந்தரம், தொழிலாளர் உதவி ஆணையர் (ச.பா.தி) ஜெ.மணிகண்டபிரபு, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ராஜசெல்வி உட்பட துறைசார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் உயிரிழப்பு 3 ஆக உயர்வு!
செவ்வாய் 8, ஜூலை 2025 12:43:26 PM (IST)

இத்தனை விபத்துகள் நேர்ந்த பின்னும், மத்திய அரசுக்கு துளியளவும் கவலை இல்லை: கனிமொழி எம்பி
செவ்வாய் 8, ஜூலை 2025 12:37:58 PM (IST)

நாடு முழுவதும் நாளை பொது வேலைநிறுத்தம்: தமிழ்நாட்டில் பஸ்-ஆட்டோக்கள் ஓடாது...?
செவ்வாய் 8, ஜூலை 2025 12:26:11 PM (IST)

நெல்லையப்பர் கோயில் ஆனித்திருவிழா தேரோட்டம்: திருநெல்வேலியில் கோலாகலம்
செவ்வாய் 8, ஜூலை 2025 11:39:30 AM (IST)

பள்ளி வேன் மீது ரயில் மோதி 2 மாணவர்கள் பலி: முதல்வர் இரங்கல் - ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!
செவ்வாய் 8, ஜூலை 2025 10:47:13 AM (IST)

ரயில் விபத்தில் 2 மாணவர்கள் பலி: எடப்பாடி பழனிசாமி இரங்கல்
செவ்வாய் 8, ஜூலை 2025 10:40:28 AM (IST)
