» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கள்ளழகர் திருவிழாவில் புனிதமான பாரம்பரியத்தை கொண்டாடுகிறோம் : ஆளுநர் ரவி வாழ்த்து!

திங்கள் 12, மே 2025 12:34:52 PM (IST)

கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வேளையில், நாம் பக்தி, கலாசாரம் மற்றும் தலைமுறைகளை ஒன்றிணைக்கும் ஒரு புனிதமான பாரம்பரியத்தை கொண்டாடுகிறோம் என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "பிரசித்தி பெற்ற வைகை கள்ளழகர் திருவிழாவையொட்டி வாழ்த்துகள். கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வேளையில், நாம் பக்தி, கலாசாரம் மற்றும் தலைமுறைகளை ஒன்றிணைக்கும் ஒரு புனிதமான பாரம்பரியத்தை கொண்டாடுகிறோம்.

இந்த கொண்டாட்டம் நமது பாரம்பரியத்தின் வலிமையையும், காலத்தால் அழியாத ஒற்றுமையில் நம்மை ஒன்றிணைக்கும் உணர்வையும் தெளிவாக பிரதிபலிக்கிறது. கள்ளழகரின் அருள் நம் அனைவருக்கும் நல்லிணக்கம், வளம் மற்றும் ஆன்மிக பலத்தையும், நமது தேசத்துக்கு அதிக மகிமையையும் கொண்டு வரட்டும்” என்று ஆளுநர் கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory