» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மகளிர் உரிமைத் தொகைக்கு விடுபட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்: முதல்வர் ஸ்டாலின்

வெள்ளி 25, ஏப்ரல் 2025 4:13:12 PM (IST)

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்டவர்கள் ஜூன் மாதம் முதல் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது குறித்து தமிழக சட்டப்பேரவையில் அறிவித்த முதல்வர் மு.க. ஸ்டாலின், மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தில் ஏற்கனவே விண்ணப்பித்து, விடுபட்டவர்கள் மீண்டும் விண்ணப்பித்தால் நிச்சயமாக அவர்களுக்கும் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 9 ஆயிரம் இடங்களில் மக்களுடன் முதல்வர் திட்டத்துக்கான முகாம் நடைபெறவிருக்கிறது. எனவே, தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில், விடுபட்டவர்கள் விண்ணப்பித்தால், தகுதியுடையவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கும் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory