» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கருணாநிதி நினைவிடத்தில் கோவில் கோபுர அலங்காரம்: அதிமுக கண்டனம்

வியாழன் 17, ஏப்ரல் 2025 3:40:49 PM (IST)



கருணாநிதி நினைவிடத்தில் கோவில் கோபுரம் போன்று அலங்காரம் செய்யப்பட்டுள்ளதற்கு அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது. 

தமிழக சட்டசபையில் தற்போது துறை வாரியாக மானியக் கோரிக்கை விவாதம் நடந்து வருகிறது. அந்த வகையில், இன்று சுற்றுலா - கலை மற்றும் பண்பாடு, இந்து சமய அறநிலையத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடந்து வருகிறது.

பொதுவாக ஒவ்வொரு மானியக் கோரிக்கையின்போதும் அந்தந்த துறைகளின் அமைச்சர்கள் மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான கருணாநிதி நினைவிடம் சென்று மரியாதை செலுத்துவது வழக்கமாக இருந்து வருகிறது. அதே நேரத்தில், தினமும் கருணாநிதி நினைவிடத்தில் பூ அலங்காரமும் செய்யப்பட்டு வருகிறது.

அந்த வகையில், இன்று இந்து சமய அறநிலையத் துறை மீதான மானியக் கோரிக்கையையொட்டி அமைச்சர் சேகர்பாபு கருணாநிதி நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அப்போது, கருணாநிதியின் நினைவிடம் கோவில் கோபுரம் போல் பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இது இந்து சமயத்தினரின் மனதை புண்படுத்துவதாக அமைந்திருப்பதாக சர்ச்சையும் எழுந்துள்ளது.

இதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், அதிமுகவும், இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது. "திமுக அரசு, இந்து மத மக்களின் உணர்வுகளை தொடர்ந்து கொச்சைப்படுத்தி வருவதாகவும், இந்துக்களை கொச்சைப்படுத்துவதில் அப்படி என்ன சந்தோசம் உங்களுக்கு?" என்றும் எக்ஸ் சமூக வலைதளம் மூலம் அதிமுக கேள்வியெழுப்பியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory