» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திருநெல்வேலி மாவட்டத்தில் வளர்ச்சித் திட்ட பணிகள் : ஆட்சியர் இரா.சுகுமார் நேரில் ஆய்வு

புதன் 2, ஏப்ரல் 2025 5:21:32 PM (IST)



திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார், இன்று (02.04.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை அருகில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் 50 படுக்கை வசதிகள் கொண்ட தீவிர சிகிச்சை பிரிவு மைய கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதையும், பாளையங்கோட்டை குலவணிகர்புரம் இரயில்வே கேட் அருகில் ரூ.3.05 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மைய கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதையும், மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.

தொடர்ந்து, மேலப்பாளையம் அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ.72.10 கோடி மதிப்பீட்டில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப்பிரிவு, தொற்றா நோய்கள் பிரிவு மற்றும் சிறுநீரக செயழிப்பு தொடர்பான இரத்த சுத்திகரிப்பு மைய கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதையும், மானூர் ஊராட்சி ஒன்றியம் மதவக்குறிச்சி பகுதியில் ரூ12.58 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டுமான பணிகளையும் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்ததோடு, வளர்ச்சித் திட்ட பணிகளை விரைந்து முடித்திட துறைசார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

ஆய்வில், உதவி இயக்குநர் (வேலைவாய்ப்பு) மரிய சகாய அந்தோணி, பொதுப்பணித்துறை பொறியாளர்கள் ரமாகோமதி உட்பட துறைசார்ந்த அலுவலர்கள், மருத்துவர்கள் பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory