» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகத்தில் 3 நாட்கள் கனமழை வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

புதன் 2, ஏப்ரல் 2025 10:15:06 AM (IST)

தமிழகத்தில் நாளை ஏப்ரல் 3 முதல் 5ம் தேதி வரை 3 நாட்கள் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக வெயில் சுட்டெரித்து வருகிறது. அதிக வெயில் காரணமாக மக்கள் வெளியில் செல்வதற்கே தயங்கி வருகிறார்கள். கோடைக்காலம் தொடங்கிவிட்டதால் வெயில் பல்வேறு இடங்களில் 100 டிகிரி பாரன்கீட்டை தாண்டியது. இந்த நிலையில் நாளை முதல் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.

இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- "தமிழகத்தில் நாளை 3ந் தேதி 5 மாவட்டங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. கோவை, நீலகிரி, ஈரோடு, தேனி, திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. 

மேலும் வருகின்ற 4, 5ம் தேதிகளில் தமிழகத்தில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. குறிப்பாக கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, திருச்சி உள்பட 15 மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் நிற எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. சென்னையில் இன்றும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவும் இல்லை. இவ்வாறு வானிலை ஆய்வு மைய அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory