» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நெல்லை - திருச்செந்தூர் ரயில்நிலைய நடைமேடைகள் உயர்த்தும் பணி பிப்.17ல் தொடக்கம்!
சனி 15, பிப்ரவரி 2025 5:58:13 PM (IST)
நெல்லை - திருச்செந்தூர் இடையே 6 ரயில்நிலைய நடைமேடைகள் உயர்த்தும் பணி பிப்.17ஆம் தேதி காயல்பட்டனத்தில் தொடங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
நெல்லை - திருச்செந்தூர் இடையேயுள்ள 6 ரயில் நிலையங்களில் தாழ்வான நடைமேடையை உயர்த்தும் பணி முன்மொழியப்பட்டு வரும் 17ந் தேதி திங்கட்கிழமை காயல்பட்டினம் ரயில் நிலையத்தில் இருந்து தொடங்க இருப்பதாக தென்னக ரயில்வேயின் பொறியாளர் பிரிவு இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதன்படி, நெல்லை-திருச்செந்தூர் மார்க்கத்தில் உள்ள ரயில் நிலையங்களான பாளையங்கோட்டை, ஆழ்வார்திருநகரி, கச்சனாவிளை, குரும்பூர், காயல்பட்டினம் ஆகிய இடங்களில் தற்போதுள்ள தாழ்மட்ட நடைமேடை எண் 1 ஐ உயர்மட்ட நடைமேடையாக உயர்த்தவும், செய்துங்கநல்லூர் நிலையத்தில் நடைமேடை எண் 1 மற்றும் 2 யை உயர்த்தும் வகையில் திருநெல்வேலி சீனியர் பொறியாளர் பிரிவு முன்மொழிந்து, பணிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பின் படி, வருகிற 17ந் தேதி திங்கட்கிழமை காயல்பட்டினம் ரயில் நிலையத்தின் நடைமேடை உயர்த்தும் பணிக்காக இயந்திரங்களைப் பயன்படுத்தி சமாளிப்பு பலகை மற்றும் சுவர் அகற்றும் பணி தொடங்கி தொடர்ந்து நடைபெற இருப்பதாக தென்னக ரயில்வே பொறியாளர் பிரிவு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அன்னை வேளாங்கண்ணி கெபி 44-வது ஆண்டு திருவிழா : தூத்துக்குடியில் கோலாகலத் தொடக்கம்!
சனி 29, ஆகஸ்ட் 2026 9:22:58 PM (IST)

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைத்தீர்க்கும் நாள் : நலதிட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்!
சனி 29, ஆகஸ்ட் 2026 5:43:26 PM (IST)

மூதாட்டியைக் கட்டிப்போட்டு 44 கிராம் நகை பறிப்பு : பக்கத்து வீட்டுப் பெண் உட்பட 2 பேர் கைது!
சனி 29, ஆகஸ்ட் 2026 5:14:03 PM (IST)

பெண்ணைக் கொன்று வேக வைத்த கொடூர தம்பதி கைது: விசாரணையில் பகீர் தகவல்கள்!
சனி 29, ஆகஸ்ட் 2026 4:39:35 PM (IST)

விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துக: தமிழக அரசுக்கு தேமுதிக வலியுறுத்தல்!
சனி 29, ஆகஸ்ட் 2026 10:50:02 AM (IST)

அஞ்சல்துறையில் 2,095 பணியிடங்கள்: பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
சனி 29, ஆகஸ்ட் 2026 10:34:39 AM (IST)



BalamuruganFeb 16, 2025 - 12:46:20 PM | Posted IP 162.1*****