» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பெரியார் சிலை அருகே நா.த.க பொதுக்கூட்டம் நடத்த அனுமதியில்லை : உயர்நீதிமன்றம்
வெள்ளி 14, பிப்ரவரி 2025 5:33:53 PM (IST)
பழனியில் பெரியார் சிலை அருகே நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை மறுப்பு தெரிவித்த நிலையில், வேறு இடத்தில் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தைப்பூசத்தை காரணம் காட்டி எங்களுக்கு அனுமதி மறுத்து உத்தரவு பிறப்பித்து உள்ளனர். இது ஏற்கத்தக்கது அல்ல. எனவே காவல் நிலையத்தின் உத்தரவை ரத்து செய்து வரும் 16-ந்தேதி மாலை அதே இடத்தில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி தனபால் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. நாம் தமிழர் கட்சியின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் வரும் ஞாயிற்றுக்கிழமை பொதுக்கூட்டம் நடத்த ஏற்பாடுகள் செய்துள்ளோம், அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது என்றார்.
தொடர்ந்து, நீதிபதி தற்போது தைப்பூச நிகழ்வு என்பது அங்கே நடைபெற்று வருகிறது. மேலும் பொதுக்கூட்டம் நடத்தும் இடம் அருகே 50 அடி தூரத்தில் பெரியார் சிலை இருப்பதால் அந்தப் பகுதியில் போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது.
வேறு இடத்தை தேர்வு செய்து கொடுத்தால் அனுமதி வழங்குவது குறித்து பரிசீலனை செய்யப்படும் எனக் கூறிய நீதிபதி, மனுதாரர் தரப்பில் தகவல் கேட்டு தெரிவிக்க கூறி வழக்கு விசாரணை சிறிது நேரம் ஒத்தி வைத்தார்.
இந்நிலையில், இந்த வழக்கு மீதான விசாரணையின்போது பழனி அருகே நெய்க்காரப்பட்டியில் உள்ள பங்களா தெருவில் 22ம் தேதி பொதுக்கூட்டம் நடத்திட நாம் தமிழர் கட்சிக்கு ஐகோர்ட் கிளை அனுமதி வழங்கியுள்ளது. அமைதியான முறையில் பொதுக்கூட்டம் நடத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அனுமதி வழங்கியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கல்லூரியில் பேராசிரியைக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர் கைது!
புதன் 19, மார்ச் 2025 5:26:54 PM (IST)

நெல்லை ஜாஹிர் உசேன் கொலை வழக்கு: குற்றவாளியை சுட்டு பிடித்த போலீசார்!
புதன் 19, மார்ச் 2025 5:01:36 PM (IST)

நெல்லையில் முன்னாள் எஸ்.ஐ., ஜாஹிர் உசேன் கொலை : காவல்துறை அதிகாரிகள் 2பேர் சஸ்பெண்ட்
புதன் 19, மார்ச் 2025 4:57:26 PM (IST)

நெல்லை ஜாஹிர் உசேன் கொலையில் யாரும் தப்ப முடியாது : முதல்வர் ஸ்டாலின் உறுதி!
புதன் 19, மார்ச் 2025 4:34:05 PM (IST)

தவெகவில் இருந்து ஆதவ் அர்ஜுனா இடைநீக்கம்? - தமிழக வெற்றிக்கழகம் விளக்கம்
புதன் 19, மார்ச் 2025 10:29:04 AM (IST)

கட்டுமான பணியின்போது மின்சாரம் தாக்கி ஆக்கி வீரர் உள்பட 2 பேர் பலி: நெல்லையில் பரிதாபம்
புதன் 19, மார்ச் 2025 8:35:58 AM (IST)
