» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சமக்ர சிக்ஷா திட்டத்தில் மத்திய அரசு ஒதுக்கிய ரூ.1,050 கோடி எங்கே? அண்ணாமலை கேள்வி
வெள்ளி 14, பிப்ரவரி 2025 4:37:57 PM (IST)
சமக்ர சிக்ஷா திட்டத்தின்கீழ் மத்திய அரசு ஒதுக்கிய ரூ.1,050 கோடி நிதி எங்கே போனது என்று தமிழக அரசுக்கு, பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளாா்.

இந்த நிதியில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை, தகவல் தொடா்பு தொழில்நுட்பம் தனிப்பாடமாக அமைக்கப்பட வேண்டும். ஆனால், தமிழகத்தில், அறிவியல் பாடத்தின் ஒரு பகுதியாக மட்டுமே வைக்கப்பட்டுள்ளதால், இந்த திட்டத்தின் நோக்கம் சிதைகிறது.
திமுக கூட்டணிக் கட்சியான கம்யூனிஸ்ட் ஆட்சி செய்யும் கேரளத்தில், தமிழ் உள்பட மும்மொழிகளில், ஆறாம் வகுப்பில் இருந்தே தகவல் தொடா்பு தொழில்நுட்பக் கல்விப் பாடம் உள்ளது. குறைந்தபட்சம், கேரளத்திடமிருந்து தமிழில் இருக்கும் அந்தப் பாடநூலையாவது வாங்கி, தமிழகத்தில் 6-ஆம் வகுப்பு மாணவா்களுக்குக் கொடுத்திருக்கலாம்.
ஆனால், இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் செயல்பட்ட தன்னாா்வலா்களை கேரள அரசு நிறுவனமான கெல்ட்ரான் நிறுவனத்தின் கீழ், மாதம் ரூ.11,500 ஊதியத்தில் அலுவலகப் பணியாளா் மற்றும் தகவல் தொடா்பு தொழில்நுட்பப் பயிற்றுநா் என்ற புதிய பணியிடத்தை உருவாக்கி பணியில் அமா்த்தியுள்ளது.
கணினி அறிவியலில் முறையான கல்வித் தகுதி பெறாதவா்களை, அலுவலகப் பணியாளா் மற்றும் தகவல் தொடா்பு தொழில்நுட்பப் பயிற்றுநா் என்ற பெயரில் நியமித்து, உச்சநீதிமன்ற வழிகாட்டுதலை மீறியிருக்கிறது திமுக அரசு.
கடந்த மூன்று ஆண்டுகளில், சமக்ர சிக்ஷா திட்டத்தின்கீழ், தகவல் தொடா்பு தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் செயல்பாடுகள் பாடத்திட்டத்துக்காக, மத்திய அரசு, தமிழகத்துக்கு வழங்கிய ரூ.1,050 கோடி எங்கே சென்றது? இது குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் விளக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ராமதாஸ் காலத்தில் பாமகவுக்கு இப்படி ஒரு சோதனை : ஜி.கே.மணி வேதனை
செவ்வாய் 14, அக்டோபர் 2025 12:50:01 PM (IST)

பெண்ணிடம் நகை பறித்தவருக்கு 3 ஆண்டு சிறை : திருநெல்வேலி நீதிமன்றம் தீர்ப்பு!!
செவ்வாய் 14, அக்டோபர் 2025 11:15:52 AM (IST)

தமிழக சட்டசபை கூட்டம் தொடங்கியது: கரூர் துயர சம்பவத்திற்கு இரங்கல்!
செவ்வாய் 14, அக்டோபர் 2025 11:04:25 AM (IST)

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை 16-ம்தேதி தொடங்கும் : வானிலை ஆய்வாளர்கள் தகவல்!
செவ்வாய் 14, அக்டோபர் 2025 11:01:38 AM (IST)

திருநெல்வேலியில் 1 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 பேர் கைது!
செவ்வாய் 14, அக்டோபர் 2025 10:55:36 AM (IST)

பிளஸ்-1 பொதுத்தேர்வு ரத்து செய்ததற்கான அரசாணை வெளியீடு: மதிப்பெண் சான்றிதழ் நடைமுறை மாற்றம்!
செவ்வாய் 14, அக்டோபர் 2025 8:41:21 AM (IST)
