» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பாளை. சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் புற்றுநோய் தின கருத்தரங்கம்!!
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 3:13:34 PM (IST)

பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் விலங்கியல் துறை மற்றும் திருநெல்வேலி அரசு அருங்காட்சியகம் சார்பில் புற்றுநோய் தின கருத்தரங்கம் நடைபெற்றது.
கல்லூரி முதுகலை விலங்கியல் துறைத் தலைவர் எம்.ஐ. டிலைட்டா மனோ ஜாய்ஸ் வரவேற்புரை ஆற்றினார். கல்லூரி முதல்வர் எஸ்.எம். அப்துல் காதர், துணை முதல்வர் எஸ். எம். ஏ. சையது முகமது காஜா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். திருநெல்வேலி அரசு அருங்காட்சியத்தின் காப்பாளர் வி. சிவகுமார் கருத்தரங்கின் சிறப்புகள் குறித்து பேசினார். ஜே. சிபா வான்மதி சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தி பேசினார்.
கருத்தரங்கில் திருவனந்தபுரம், கேரளா, பேலியம் இந்தியா அமைப்பின் கல்வி மற்றும் திறன் வளர்ச்சித் துறையின் குழுத் தலைவர் மருத்துவர் S. ஹஸ்மத் பர்ஹானா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு புற்றுநோய்க்கான "பேலியேடிவ் கேர்” என்ற தலைப்பில் புற்றுநோய் மற்றும் பல்வேறு நோய்களின் தாக்கத்தால் அவதிப்படும் பாதிப்பாளர்களுக்கு அளிக்க வேண்டிய சேவைகள் குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், மாணவர்கள் தன்னார்வலர்கள்களாக முன் வர வலியுறுத்தியும் சிறப்புரையாற்றினார்.
கல்லூரியின் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியும் துறைத் தலைவருமான எம் சித்தி ஜமீலா மாணவர்களிடையே மனித சேவையின் முக்கியத்துவத்தை விளக்கிப் பேசினார். முன்னதாக நடைபெற்ற உலக புற்றுநோய் தின விழிப்புணர்வு போட்டிகளான கருத்தோவியே போட்டி, உணவு தயாரித்தல் போட்டி மற்றும் புற்றுநோய் விழிப்புணர்வு வாசகங்கள் எழுதும் போட்டியும் நடைபெற்றது. அதில் வெற்றி பெற்ற மற்றும் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் தர கட்டுப்பாட்டுத் துறை ஒருங்கிணைப்பாளர் முகமது ஹனீப், துணை தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி முகமது ரோசன் கலந்து மற்றும் விலங்கியல் துறை பேராசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர். நிறைவாக பி. எஸ் பென்சி நன்றியுரை ஆற்றினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் குளம் போல மாறிய அரசுப் பள்ளி : பொதுப்பணித்துறை அதிகாரிகள் அலட்சியம்
வெள்ளி 24, அக்டோபர் 2025 5:15:54 PM (IST)

வங்கக்கடலில் புயல்: சென்னை உள்பட 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!
வெள்ளி 24, அக்டோபர் 2025 4:48:53 PM (IST)

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
வெள்ளி 24, அக்டோபர் 2025 4:17:41 PM (IST)

காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுவடைந்தது : சென்னையில் கனமழைக்கு வாய்ப்பு!
வெள்ளி 24, அக்டோபர் 2025 12:54:33 PM (IST)

கனிம வளத்துறை உதவி இயக்குனர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை!
வெள்ளி 24, அக்டோபர் 2025 12:06:49 PM (IST)

தமிழ்நாட்டில் பள்ளிகளில் மாணவர் இடைநிற்றல் விகிதம் அதிகரிப்பு : யு.டி.ஐ.எஸ்.இ. தகவல்
வெள்ளி 24, அக்டோபர் 2025 11:55:14 AM (IST)


.gif)