» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திருப்பரங்குன்றத்தில் ஆர்ப்பாட்டம் விவகாரம்: மதுரை மாவட்டத்தில் இன்று 144 தடை

செவ்வாய் 4, பிப்ரவரி 2025 12:04:17 PM (IST)

திருப்பரங்குன்றத்தில் ஆர்ப்பாட்டம் விவகாரம் மதுரை மாவட்டத்தில் இன்று 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-திருப்பரங்குன்றம் கோவில் முன்பு இன்று (செவ்வாய்க்கிழமை) இந்து அமைப்பினர் மற்றும் அதன் ஆதரவு அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் அதற்கு தென் மாவட்டங்களில் இருந்து பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும் கலந்து கொள்ள உள்ளதால் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்து உள்ளனர். 

இதனிடையே இந்து மற்றும் முஸ்லிம் அமைப்புகளை சார்ந்தோர் திருப்பரங்குன்றம் மலை குறித்து தங்கள் கோரிக்கையை, பல்வேறு கருத்துகளை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து வருகின்றனர்:

இதனால் இந்து மற்றும் முஸ்லிம் அமைப்பினர் இடையே அசாதாரண சூழல் உருவாக வாய்ப்புள்ளதால் மதுரை மாவட்டம் மற்றும் மாநகர் முழுவதும் வெளி நபர்கள் பிரவேசிக்காத வகையில் கடந்த 3-ந்தேதி (அதாவது நேற்று) காலை 6 மணி முதல் இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 12 மணி வரை 2 நாட்கள் மட்டும் மதுரை மாநகர் மற்றும் மாவட்டத்தில் பொது அமைதியை பாதுகாக்கும் பொருட்டு, மனித வாழ்வு, பொது பாதுகாப்பு மற்றும் பொது அமைதியை கருத்தில் கொண்டும் போராட்டங்கள், கூட்டங்கள் மற்றும் தர்ணாக்கள் போன்றவற்றிற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது..


மக்கள் கருத்து

adakumuraiFeb 4, 2025 - 01:36:06 PM | Posted IP 172.7*****

hindukkal meethana adakkumurai....

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory