» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை எழும்பூர் - கன்னியாகுமரி சிறப்பு ரயில் அறிவிப்பு!
வெள்ளி 24, ஜனவரி 2025 11:38:44 AM (IST)
குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை எழும்பூர் - கன்னியாகுமரி இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.
குடியரசு தினத்தை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக ஜன.24 மற்றும் ஜன.26 தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதன்படி, சென்னை எழும்பூரில் இருந்து இன்று (ஜன.24) கன்னியாகுமரிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
இரவு 10.40 மணிக்கு புறப்படும் இந்த ரயில் நாளை (ஜன.25) நள்ளிரவு 12 மணிக்கு கன்னியாகுமரி சென்று சேரும். மறு மார்க்கத்தில் ஜன.26 இரவு 8.30 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து புறப்படும் ரயில் ஜன.27 காலை 8.30 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.
சென்னை சென்ட்ரலில் இருந்து ஜன.24 இரவு 11.50 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் (ஜன.25) மாலை 6.05 மணிக்கு திருவனந்தபுரம் சென்றடையும். மறுமார்க்கமாக, ஜன.26ல் திருவனந்தபுரத்தில் இருந்து இரவு 8.20 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் ஜன.27 மதியம் 2 மணிக்கு சென்ட்ரல் வரும். பயணிகள் அனைவரும் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து சிறப்பு ரயில்களின் சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருச்செந்தூர் கோவில் பாதுகாப்பில் 360 டிகிரி கேமரா ஜிபிஎஸ் வாகனங்கள்: ஏடிஜிபி துவக்கி வைத்தார்
சனி 5, ஜூலை 2025 8:00:37 PM (IST)

வேலைவாய்ப்பு முகாமில் 5300 பேருக்கு பணிநியமன ஆணைகள் : சபாநாயகர், அமைச்சர்கள் வழங்கினர்!
சனி 5, ஜூலை 2025 5:44:29 PM (IST)

தமிழக வெற்றிக் கழகத்தின் ஆலோசகர் பொறுப்பிலிருந்து பிரசாந்த் கிஷோர் விலகல்!
சனி 5, ஜூலை 2025 5:15:49 PM (IST)

விவசாய நிலம் வாங்குவதற்கு ரூ. 5 இலட்சம் வரை கடன் உதவி : ஆட்சியர் க.இளம்பகவத் தகவல்
சனி 5, ஜூலை 2025 4:39:34 PM (IST)

எடப்பாடி பழனிசாமிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு: மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு
சனி 5, ஜூலை 2025 11:43:12 AM (IST)

தூத்துக்குடி விமான நிலையம் ரூ.380 கோடியில் விரிவாக்கம் : விரைவில் திறப்பு விழா!
சனி 5, ஜூலை 2025 8:58:51 AM (IST)
